Ad Space avaiable

இந்திய ராணுவத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வு பெற்ற அஸ்மல் ஹக்கிற்கு வந்த சோதனை.


- அபூசாலி சுல்பிகார் -

இந்திய ராணுவத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வு பெற்ற அதிகாரியை பங்களாதேஷ் இல்   இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர் என அசாம் மாநில போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளது. வெளிநாட்டவர்களுக்கான தீர்ப்பாயம் இவ்விவகாரம் தொடர்பாக 3-ம் தேதி விசாரிக்கிறது.

அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியிலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷாயாகானில் வசிப்பவர் முகத் அஸ்மல் ஹக்.

ராணுவத்தில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். ஹக் பேசுகையில், “நான் மிகவும் வருத்தம் அடைந்து உள்ளேன். மிகவும் அதிகமாக அழுதுவிட்டேன். என்னுடைய ஆன்மா உடைந்துவிட்டது... 30 வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றிய பின்னர் இதுபோன்ற அவமதிப்பை எதிர்க்கொண்டு உள்ளேன்,” என பேசிஉள்ளார். மேலும் பேசுகையில்,

 “நான் வங்காளதேசத்தில் இருந்து வந்த சட்டவிரோத குடியேறி என்றால் இந்திய ராணுவத்தில் எப்படி நான் பணியாற்றியிருக்க முடியும்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒருவர் ராணுவத்தில் சேரும்போது போலீஸ் ஆய்வு செய்வது என்பது கட்டாயமானது. என்னுடைய வழக்கிலும் போலீஸ் பரிசோதனை என்பது நடந்தது என குறிப்பிட்டு உள்ளார்.

அசாமில் சட்டவிரோதமாக வங்காளதேச நாட்டவர்கள் குடியேறுவது என்பது மிகவும் முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் 6 மாவட்டங்கள் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாக ஆகிஉள்ளது. சமீப காலமாகவே அங்கு இந்த உயர்வு காணப்படுகிறது. அசாமில் கடந்த வருடம் ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா, வங்காளதேசத்தில் இருந்து வரும் சட்டவிரோத குடியேறிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே முதன்மை பணியாகும் என வாக்குறுதியை கொடுத்தது. கடந்த 2012-ம் ஆண்டு தன்னுடைய மனைவி மும்தாஸ் பேகவும் இதுபோன்ற அவமதிப்பை எதிர்க்கொண்டார் என கூறும் ஹக்,

அப்போது நாங்கள் எங்களுடைய குடியுரிமையை உறுதிசெய்ய ஆவணங்களை சமர்பித்தோம். தீர்ப்பாய நீதிமன்றத்தில் நாங்கள் அனைத்து ஆதாரங்களையும் ஒப்படைத்தோம், அவர்களும் நாங்கள் சரியான இந்திய குடியுரிமையை கொண்டு உள்ளோம் என குறிப்பிட்டு உள்ளார்.
இந்திய ராணுவத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வு பெற்ற அஸ்மல் ஹக்கிற்கு வந்த சோதனை. இந்திய ராணுவத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வு பெற்ற அஸ்மல் ஹக்கிற்கு வந்த சோதனை. Reviewed by Madawala News on 10/01/2017 04:12:00 PM Rating: 5