Kidny

Kidny

மாதம்பை வைத்தியசாலைக்கு அருகில் 30 இலட்சம் பெறுமதியான மருந்துகளுடன் பெண் உற்பட இருவர் கைது.



மாதம்பை வைத்தியசாலைக்கு அருகில் முப்பது இலட்சத்து பத்தாயிரம் ரூபா பெறுமதியான மருந்துகளுடன்
பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, முச்சக்கர வண்டியொன்றை பரிசோதித்த போதே, அதில் மருந்துகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, ட்ரமடோல் எனப்படும் மருந்துகள் 2600 அடங்கிய 26 பெட்டிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அப் பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 6000 மருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. 

கைதுசெய்யப்பட்டவர்கள் மாதம்பை - இகலம பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண் ஒருவரும், மாதம்பை - பழைய நகர் பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஆணும் ஆகும். 

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
மாதம்பை வைத்தியசாலைக்கு அருகில் 30 இலட்சம் பெறுமதியான மருந்துகளுடன் பெண் உற்பட இருவர் கைது. மாதம்பை வைத்தியசாலைக்கு அருகில் 30 இலட்சம் பெறுமதியான மருந்துகளுடன் பெண் உற்பட இருவர் கைது. Reviewed by Madawala News on 10/29/2017 09:45:00 AM Rating: 5