Kidny

Kidny

ரதனசார எமது அமைப்பை சேர்ந்தவர் அல்ல ; சிங்கல ராவய


சிங்கள ஜாதிக்க பலவேகவின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரரை

எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் 


இன்று கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடு  ஒன்றை நடத்திய சிங்கல குறித்த தேரர் தங்களது அமைப்பை சேர்ந்த ஒருவர் அல்ல என சுட்டிக்காட்டியுள்ளது.


சிங்கல ராவய அமைப்பின் பொது செயலாளர் அக்மீமன தேரர் கருத்து வெளியிடுகையில்,


தேசிய அமைப்புக்கள் நடத்திய பல ஆர்பாட்டங்களில் கலந்துகொண்ட குறித்த தேரர் தங்கள் அமைப்பை சேர்ந்தவர் அல்ல எனவும் தாங்கள் ரோஹிங்யா அகதிகள் இருந்த இடத்திற்கு சென்ற போது அவரும் அங்கு வந்திருந்தாக குறிப்பிட்டுள்ளார்



கல்கிசையில் UNHCR அனுசரணையில் தங்கவைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா அகதிகளை அச்சுறுத்தியமை மற்றும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியமை தொடர்பில் கடந்த சில வாரங்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த தேரர், நேற்று முன்தினம் நிட்டம்புவயில் வைத்து கைது செய்யப்பட்டார்.


இதன்போது தேரரிடமிருந்து இரு தேசிய அடையாள அட்டைகளை பொலிஸார் மீட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியிருந்தார்.


இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.


இவர்களில் ஐவர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இன்னும் இருவர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ரதனசார எமது அமைப்பை சேர்ந்தவர் அல்ல ; சிங்கல ராவய  ரதனசார எமது அமைப்பை சேர்ந்தவர் அல்ல ; சிங்கல ராவய Reviewed by Madawala News on 10/21/2017 07:44:00 PM Rating: 5