Kidny

Kidny

இஹ்ராமுடன் விமான நிலையத்திலிருந்து திரும்பி வந்த 32 ஹஜ் பயணிகளின் பணத்தை திருப்பி தருவதாக உறுதி அளிக்கபட்டது.


ஏ.ஆர்.ஏ.பரில்-

ஹஜ் முகவர்நிலையங்களின் கவனயீனத்தால் இறுதி நேரத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு முடியாமல்
போன 32 ஹஜ் யாத்திரிகர்கள் முகவர் நிலையத்திற்கு செலுத்தியுள்ள பணம் முகவர் நிலைய உரிமையாளர்களினால் திருப்பிக் கையளிக்கப்படவுள்ளது.

32 ஹஜ் யாத்திரிகர்கள் சவூதி அரேபியாவுக்குப் பய ணிப்பதற்கான விமானப் பயணச்சீட்டுகளை ஏற்பாடு செய்யத் தவறிய மூன்று ஹஜ் முகவர்நிலையங்களின் உரிமையாளர்கள் தாங்கள் ஹஜ் யாத்திரிகர்களிடமிருந்து கட்டணமாக அறவிட்ட பணத்தை அவர்களுக்கு மீள கையளிப்பதாக முஸ்லிம்  பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரிடமும் அரச ஹஜ் குழு வினரிடமும் உறுதியளித்துள்ளார்கள்.


முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இவ்விவகாரத்துடன் தொடர்புபட்ட மூன்று ஹஜ் முகவர்நிலைய உரிமையா ளர்களையும் நேற்று முன்தினம் மாலை அழைத்து விசாரணைகளை நடத்தியது.

 32 ஹஜ் யாத்திரிகர்களி டமிருந்தும் அறவிடப்பட்ட பணம் தாமதியாது உரியவர்களுக்கு திருப்பி வழங்கப்பட வேண்டுமென விசாரணையின் போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம் மலிக் மற்றும் அரச ஹஜ் குழுத்தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் ஆகியோ ரினால் கோரப்பட்டது.

ஹஜ் யாத்திரிகர்களிடமிருந்து தங்களால் அறவிடப்பட்ட பணத்தை திருப்பி கையளிப்பதாக அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

32 ஹஜ் விண்ணப்ப தாரிகளுக்கும் முகவர்நிலையங்கவினால் சவூதி அரேபியாவில் தலா 2529 சவூதி ரியால்கள் முஅல்லிம் கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தப் பணத்தை திருப்பி பெற்றுக் கொள்வதற்கான நடவ டிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் முகவர்நிலைய உரிமையாளர்கள் விசாரணையின் போது தெரிவித் தனர்.

இறுதி நேரத்தில் விமானப் பயணச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ள முடியாமற் போனமையே ஹஜ் பயணம் தடைப்பட்டதற்கான காரணம் எனவும் கூறியதுடன் தங்களால் அறவிடப்பட்ட பணத்தினை ஹஜ் விண்ணப்பதாரிகளுக்கு திருப்பிக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் உறுதியளித்தனர் இறுதி நேரத்தில் இலங்கைக்கு கிடைத்த 600 ஹஜ் கோட்டாவிலே குறிப்பிட்ட 32 ஹஜ் விண்ணப் பதாரிகளும் உள்ளடங்கியிருந் தனர்.

அவர்கள் ஹஜ் கடமைக் காக இஹ்ராம் அணிந்து விமான நிலையத்துக்கு சென்று விமான நிலையத்தில்  திரும்பி வந்தமை குறிப்பிடத்தக்கது .

32 ஹஜ் விண்ணப்பதாரிகளும் தலா 4 முதல் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையிலான பணத்தை குறிப்பிட்ட மூன்று ஹஜ் முகவர்களிடம் கட்டணமாக செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஹ்ராமுடன் விமான நிலையத்திலிருந்து திரும்பி வந்த 32 ஹஜ் பயணிகளின் பணத்தை திருப்பி தருவதாக உறுதி அளிக்கபட்டது. இஹ்ராமுடன் விமான நிலையத்திலிருந்து திரும்பி வந்த 32 ஹஜ் பயணிகளின் பணத்தை திருப்பி தருவதாக உறுதி அளிக்கபட்டது. Reviewed by Madawala News on 10/19/2017 01:55:00 PM Rating: 5