Ad Space avaiable

36 பேர் பலியான கலவரத்தை 1.25 கோடி செலவழித்து தூண்டினேன். செக்ஸ் சாமியார், குர்மீத் ராம் ரகீமின் மகள் வாக்குமூலம்.


என் தந்தையை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்த பின் கலவரத்தை தூண்டியது உண்மைதான் என செக்ஸ் சாமியார், குர்மீத் ராம் ரகீமின் மகள், ஹனிப்ரீத் ஒப்புக் கொண்டுள்ளார். அரியானாவில், முதல்வர், மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில், மிக பிரபலமாக இருக்கும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம், பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இருக்கிறார். குர்மீத் சிங் குற்றவாளி என கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வெளியானதும், அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், 36 பேர் பலியாயினர். இந்த கலவரத்தை தூண்டியதாக, குர்மீத்தின் வளர்ப்பு மகள், ஹனிப்ரீத் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்; இதையடுத்து, தலைமறைவான ஹனிப்ரீத்தை, போலீசார், சமீபத்தில் கைது செய்தனர்.

அவரிடம், போலீசார் விசாரணை நடத்தினர்; அப்போது, தன் தந்தை குற்றவாளி என, நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததும், அரியானாவின் பஞ்ச்குலாவில், கலவரத்தை தூண்டியதை, ஹனிப்ரீத் ஒப்புக் கொண்டதாக, போலீசார் தெரிவித்தனர். இது பற்றி போலீசார் கூறியதாவது:கலவரத்தை தூண்டுவதற்காக, பஞ்ச்குலாவின் வரைபடத்தை வைத்து, ஹனிப்ரீத், ஆதரவாளர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.


கலவரத்தில் ஈடுபட, சாமியார் ஆதரவாளர்களுக்கு, 1.25 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர். ஹனிப்ரீத்தின் போலீஸ் காவல், நேற்று முன்தினத்துடன் முடிந்தது. விசாரணை முடியாததால், அவரது காவலை நீட்டிக்க, போலீசார் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, அவரது போலீஸ் காவலை, அக்., 13 வரை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
36 பேர் பலியான கலவரத்தை 1.25 கோடி செலவழித்து தூண்டினேன். செக்ஸ் சாமியார், குர்மீத் ராம் ரகீமின் மகள் வாக்குமூலம். 36 பேர் பலியான கலவரத்தை  1.25 கோடி செலவழித்து தூண்டினேன். செக்ஸ் சாமியார், குர்மீத் ராம் ரகீமின் மகள் வாக்குமூலம். Reviewed by Madawala News on 10/12/2017 11:51:00 PM Rating: 5