Kidny

Kidny

காணாமல் போன கம்பளை டிப்பர்.. 40 லட்சம் ரூபாவிற்கு விற்க தயார் நிலையில் பிடிபட்டது.


கம்பளை பகுதியில் காணாமல் போன 45 லட்சம் ரூபா பெருமதியான டிப்பர் வாகனம் நிட்டம்புவ பகுதியில் மீட்கப்பட்டதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

நிட்டம்புவ உடாம்பிட்டிய பிரதேசத்தில் குடியிருப்பு பகுதியொன்றிலே டிப்பர் வாகனம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 2 ம் திகதி கம்பளை பொலிஸ் நிலையத்தில் குறித்த லொறியின் உரிமையாளரினால் தனது டிப்பர் வாகனம் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலே நிட்டம்புவ பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளது.

அண்மையகாலத்தில் பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காணாமல் போன வாகனங்கள் சில பூண்டுலோயா பொலிஸாரினால் மீட்கப்பட்டதுடன் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சிலரையும் பொலிஸார் கைது செய்தனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலமே மேற்படி டிப்பர் வாகனம் நிட்டம்புவ பகுதியிலிருந்து மீட்கப்பட்டதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட டிப்பர் வாகனத்தின் செசி இலக்கம், எஞ்சின் இலக்கம் மற்றும் லொறியின் இலக்கம் ஆகியன மாற்றப்பட்டு மோட்டர் வாகன திணைக்களத்தில் போலி இலைக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

குறித்த டிப்பர் வாகனத்தை 40 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயார் நிலையில் இருந்த போதே பூண்டுலோயா பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டு மீட்டதாகவும் மேலதிக விசாரணைக்காக டிப்பர் வாகனத்தை கம்பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் பூண்டுலோயா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சுரவீர தெரிவித்தார்.
காணாமல் போன கம்பளை டிப்பர்.. 40 லட்சம் ரூபாவிற்கு விற்க தயார் நிலையில் பிடிபட்டது. காணாமல் போன கம்பளை டிப்பர்.. 40 லட்சம் ரூபாவிற்கு விற்க தயார் நிலையில் பிடிபட்டது. Reviewed by Madawala News on 10/07/2017 04:33:00 PM Rating: 5