Kidny

Kidny

விலபத்துவில் 40 பள்ளிவாய்கள் ; போலி பிரசாரங்கள் தொடர்கின்றன..


வில்பத்து காட்டை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அழிப்பதாக பெரும்பான்மை கடும்போக்காளர்கள் பிரசாரம் முன்னெடுக்கும் நிலையில் வில்பத்து பிரதேசத்தில்

அமைச்சர் ரிஷாத் 40 பள்ளிவாயல்களை நிர்மாணித்துள்ளதாக கடும்போக்கு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


முஸ்லிம் நாடுகளின் அனுசரணையுடன் வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம் குடியேற்றங்களை அமைப்பதாகவும் இதுவரை 40 பள்ளிவாயல்களை நிர்மாணித்துள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகள் அரசுக்கு தகவல் வழங்கியுள்ளதாக கடும்போக்கு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


பொதுபல சேனாவுடன் சமரசம் பேச அமைச்சர் ரிஷாத் மறுத்துள்ள நிலையில் மீண்டும் அவருக்கு எதிரான பிரசாரங்கள் பொதுபல சேனா முகநூல் மற்றும் அதன் ஆதரவு இணையதளங்களில் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

விலபத்துவில் 40 பள்ளிவாய்கள் ; போலி பிரசாரங்கள் தொடர்கின்றன..  விலபத்துவில் 40 பள்ளிவாய்கள் ; போலி பிரசாரங்கள் தொடர்கின்றன.. Reviewed by Madawala News on 10/22/2017 07:10:00 AM Rating: 5