Kidny

Kidny

40 வறிய தமிழ், முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு.


-தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி-

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் கீழ் இயங்கு தளம் தொழிற் பயிற்சி நிலையங்களில்
பயிற்சி நெறிகளை பயிலும் காத்தான்குடி, கிரான், வாழைச்சேனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 40 வறிய தமிழ், முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கான 40 துவிச்சக்கர வண்டிகள் ஐ.பி.ஏ அமைப்பின் அனுசரணையில் முஸ்லிம் எயிட் அமைப்பினால் புதன்கிழமை (25) வழங்கி வைக்கப்பட்டது.இதன் பிரதான நோக்கம் இப் பயிலுனர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும், தூர இடங்களிலிருந்து வருபவர்களின் சிரமங்களை குறைப்பதுமாகுமென முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஏ.ஜீ.எம்.பஹி தெரிவித்தார்.

இந் நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸமில், கோரளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் திரு.தனபாலசிங்கம், கோரளைப் பற்று பிரதேச செயலாளர் திரு.வாசுதேவன், இலங்கை தொழிற் பெயர் பயிற்சி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.பீ.நளீம், நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் எம்.எச்.எம்.பைசல், முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் எம்.டீ.எம்.பஸ்லான், கிராம சேவையாளர்கள், பயிற்சி நெறி போதனாசிரியர்கள் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போன்றோரும் கலந்து கொண்டனர்.

40 வறிய தமிழ், முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு. 40 வறிய தமிழ், முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு. Reviewed by Madawala News on 10/26/2017 10:57:00 AM Rating: 5