Ad Space Available here

வீழ்ச்சிப் பாதையில் முஸ்லிம் மகளிர் கல்லூரி ..
வெளிவந்துள்ள  5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் நிலமை மிகவும் கவலைகுறியதாவே காணப்படுகிறது.


இக்கல்லூரியில் இருந்து சுமார் 250 க்கும் மேற்பட்ட மாணவிகள் பரீட்சைக்கு தோற்றி இருந்த நிகையில் இதில் தமிழ் மொழி மூலம் 6 மாணவிகளும் சிங்கள மொழி மூலம் 3 மாணவிகளும் என மொத்தமாகவே 9 பேர் மாத்திரம் சித்தியடைந்துள்ளனர்


மேற்படி பரீட்சையின்  இப்பெறுபேறானது  3% ஆகும். எவ்விதமான வசதிகளும் அற்ற கிராமப்புர பாடசாலைகளில் இருந்து 20% - 30 என மாணவ மாணவிகள் சித்தியடையும்போது தலைநகரில் உள்ள தேசிய பாடசாலையான ஒரு முன்னணி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் இந்த நிலைப் பற்றி இன்னும் மகளிர் கல்லூரி சமூகம் சிந்திக்கவில்லை.


தொடர்ந்தும் தகைமையற்ற அதிபர்பாடசாலைக்கு அதிபர் இல்லாமை, நம்பி வாக்களித்த முஸ்லிம் அரசியல் தலைமைகளின் புறக்கணிப்பு கடந்தகால அதிபர்களினால் மேற்கொள்ளப்பட் பாரிய அளவிலான ஊழல் அதிபர் என்ற போர்வையில் காசுக்கு கலாநிதி பெற்ற கயவர்களினால் பாடசாலைக்கு இழைக்கப்பட்ட துரோகம் போன்றவற்றின் காரணமாக தொடர்ந்தும்  துரிதகதியில் பின்

நோக்கிச் செல்லும் இப்பாடசாலையின் நிலைபக்கம் பக்கமாக சமூக வலைகளில் வெளியாகியும் நம் சமுதாயம் சிந்திக்காமல் இருப்பது ஏன் ?  


225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாலை போட்டு சாதனை படைத்த அதிபர்களால் கல்வியில் சாதனை படைக்க முடியாமல் போனது ஏன்


இன்று அத்தனை மாணவிகளுக்கும் இரண்டே இரண்டு Computer உடன் இயங்கும் IT Room . பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்க Short-eats வாங்கவும் செலவு செய்த பணத்திற்கு பல  Computer களை வாங்கி இருக்கலாம். இவற்றிற்கு செலவு செய்யப்பட்டது வறிய மாணவிகளின் பணம்.

தனது பல கோடி ரூபா மோசடிகளை மூடி மறைக்க அமைச்சரை பாடசாலைக்கு அழைத்து பிறந்த நாள் கொண்டாடி மாணவியைவிட்டு கேக் 

ஊட்டியபோது சிந்திக்காமல் கைதட்டியதின் பிரதிபலன் இன்றை பரீட்சை முடிவு


இனியாவது சிந்தியுங்கள்


இதை சமுதாயத்திற்கு விட்டுச்சென்ற பெருந்தகைகளின் ஆத்மா சாந்திக்காகவது

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இப்பாடசாலையால் ஒரு வைத்தியரை அல்லது ஒரு கணக்காலரை அல்லது ஒரு பொறியியலாலறை உருவாக்க முடிந்ததா ?


தனது மறுமை வாழ்வுக்காக நளீம் ஹாஜியார் விட்டுச்சென்ற நழீமியாநாளுக்கு நாள் படித்தவர்களையும் பண்புள்ளவர்களையும் வெளியாக்கும் நழீமியா. சமுதாயத்திற்கு கைவிட்டுச் சென்றதற்காக கபுருக்கு

கைமாறு செய்யும் பேருவலை சமூகம் ,Sir Rasik Fareed நம்மிடம்MLC யை விட்டு சென்றதற்கு நாம் என்ன செய்தோம்


சிந்தித்தோமா நாலை மறுமையில் அல்லாஹ் எம்மிடம் கேற்கமாட்டானா


இவ்வாறே இப்பாடசாலை போகும்

பட்சத்தில் காலத்தால் இப்படாசாலை அழிந்து போகும் அல்லவா.இப்படி ஒரு பாடசாலை இருந்ததனால்தானே நம்பிள்ளைகள் படித்தன

எனவே வரும் தலமுறைக்கு நாம் ஏதும் மிச்சம் வைத்து விட்டு போகக்கூடாதா ஏன் நாம் சற்று சிந்திக்கக்கூடாது


காலத்திற்கு காலம் இங்கு அதிபர்களாக வரும் ஒவ்வெரு வரும் இப்பாடசாலையைவைவத்தே கோடீஸ்வர்களா மாறிய வரலாறுகள் ஏராளம் ஏராளம் இதற்கு விலை போனது எமது சமுதாயத்தின் எதிர்காலமும் எமது கவனையீனமுமே சிந்தித்தோமா இனியாவது சிந்திப்போம் சமுதாயத்தில் உள்ள தலைமைகள் அல்லாஹ்வுக்காக முன் வாருங்கள்  MLC யை கட்டியலுப்புவோம் இதற்காக நாம் விடும் ஒவ்வெரு மூச்சும் ஸதகதுல்ஜாரியாவாக மாறும்


இன்று அடிமேல் அடிவாங்கிய தமிழ் சமூகம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு காரணம் கல்வியே என்பதை நாம் அறிவோம். இன்று நம் நாட்டில் ஏற்பட்டுள்ள இனவாத வெள்ளம் நாம் மடயர்களாக இருந்தால் நம்மை அடித்துச்செல்லும் என்பது நிச்சயமே. எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பயங்கர  நிலமையை நாம் அறாவாளிகளாக இருந்தால் மட்டுமே சமாளிக்க முடியும் எனபது தமிழ் மக்களின் வாழ்கையில் இருந்து நாம் பாடம் படிப்போம்


அல்லாஹ்வுக்காக முன்வாருங்கள் MLC யை கட்டியெலுப்புவோம்.


அபூ இஸ்மத்

வீழ்ச்சிப் பாதையில் முஸ்லிம் மகளிர் கல்லூரி ..  வீழ்ச்சிப் பாதையில் முஸ்லிம் மகளிர் கல்லூரி .. Reviewed by Madawala News on 10/11/2017 04:12:00 PM Rating: 5