Kidny

Kidny

5S சான்றுப்படுத்தல் (5S Certification) தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு. (படங்கள்)

5S சான்றுப்படுத்தல் (5S Certification) தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
அரசநிறுவனங்கள், பாடசாலைகள், முன்பள்ளிப்பாடசாலைகள் மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் போன்றவற்றை உற்பத்தித்திறன் மிக்க நிறுவனங்களாக மாற்றுகின்ற அரசாங்கத்தின்  தற்போதைய வேலைத்திட்டத்திற்கமைவாக தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் அனுசரனையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட நிறுவனங்களின் செயற்பாட்டினை  உற்பத்தித்திறன் மிக்கதாக மேம்படுத்தும் நோக்கில ஒழுங்கு செய்யப்பட்ட 5S சான்றுப்படுத்தல் (5S Certification) தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு பிரதேச செயலாளர் ஜனாப் I.M ஹனீபா தலைமையில் 29.09..2017ம் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது .


மேட்படி நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் I.M றிகாஸ் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான M.M.M அர்ஷத் மற்றும் F.Z சிபானி, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் M.I இஷ்ஹாக், கலாசார உத்தியோகத்தர் M.I அம்ஜாத், விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர் M.M சாக்கீர், அபிவிருத்தி உத்தியோகத்தர் A.H ஜிப்ரி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், முன்பள்ளிப்பாடசாலை ஆசிரியர்கள், திணைக்களத்தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒருங்கினைப்பாளர் ரவீந்திரன் வளவாளராகக் கலந்து கொண்டு விளக்கமளித்தார்
5S சான்றுப்படுத்தல் (5S Certification) தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு. (படங்கள்) 5S சான்றுப்படுத்தல் (5S Certification) தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு. (படங்கள்) Reviewed by Madawala News on 10/04/2017 08:36:00 AM Rating: 5