Kidny

Kidny

ஹம்பாந்தோட்டையில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவிகள் ; ஜோன்ஸ்டன் MP


ஹம்பாந்தோட்டை நீதிமன்ற உத்தரவை மீறி மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் நாமல் ராஜபக்ச உட்பட
குழுவினர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களுள் 6 முஸ்லிம்களும் பாடசாலை மாணவர் மற்றும் 70 வயது வயோதிபர் மற்றும் பெண்கள் சிலரும் அடங்குவதாக கூட்டு எதிர்கட்சி உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.


இதே நேரம் தங்காலை சிறைச்சாலையில் இவர்கள் விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளவர்களை மஹிந்த ராஜபக்சவுடன் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச, யோஷித ராஜபக்ச ஆகியோர் இன்று -15- சென்று விளக்கமறியலில் உள்ளவர்களை பார்வையிட்டனர்.

சிறைச்சாலையை விட்டு வெளியே வந்த  ஊடகங்கு கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ 

இந்த நாட்டு சொத்துக்களை விற்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.விற்பனை செய்ய முயற்சிக்கும் துறைமுகம் மற்றும் விமான நிலையங்கள் மீது நாட்டு மக்களுக்கும் உரிமை உண்டு.

இன்று வடக்கில் சட்டம் இல்லை. வடக்கிற்கு தேவையான வகையிலேயே சட்டம் உள்ளது. இவர்கள் வாக்கு பெற வேண்டும் என்பதற்காக அப்படி ஒன்றை செய்து கொடுத்துவிட்டு பார்த்து கொண்டிருக்கின்றார்கள்.

இங்கு சிறைப்படுத்தப்பட்டிருப்பது அப்பாவி மக்கள் , முஸ்லிம் பிள்ளைகள், பாடசாலை மாணவர்கள்,அப்பாவி தாய்மார்கள் இங்கு உள்ளனர் குறிப்பிட்டுள்ளார்.


ஹம்பாந்தோட்டையில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவிகள் ; ஜோன்ஸ்டன் MP  ஹம்பாந்தோட்டையில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவிகள் ; ஜோன்ஸ்டன் MP Reviewed by Madawala News on 10/15/2017 08:27:00 PM Rating: 5