Ad Space avaiable

இரவு பகலாக சேவை செய்து, டெங்கு நோயை கட்டுப்படுத்திய வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மி மற்றும் 6 பேருக்கு பாராட்டு.



தோப்பூர் நிருபர்  எம்.என்.எம்.புஹாரி 

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் வேகமாக பரவி பெரும் தாக்கத்தினை உண்டுபண்ணிய டெங்கு நோயினை விரைவாக மூதூரில் கட்டுப்பாட்டுக்குல் கொண்டு வருவதற்கு மனமுவந்து இரவு பகலாக சேவை செய்த மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மி, மூதூர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் 6 பேரையும் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் திங்கட்கிழமை (09) இடம் பெற்றது.

இதில் அதீதியாக  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.கயல்விழி கலந்து சிறப்பித்தார்.
இரவு பகலாக சேவை செய்து, டெங்கு நோயை கட்டுப்படுத்திய வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மி மற்றும் 6 பேருக்கு பாராட்டு. இரவு பகலாக சேவை செய்து,  டெங்கு நோயை கட்டுப்படுத்திய வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மி மற்றும் 6 பேருக்கு பாராட்டு. Reviewed by Madawala News on 10/09/2017 10:21:00 PM Rating: 5