Kidny

Kidny

இன்று விசாரணைக்கு வந்த வழக்கு.. அக்மீமன தயாரத்ன தேரர், டான் பிரியசாத் உட்பட 7 பேரின் விளக்கமறியல் நீடிப்பு.


மியன்மார் அகதிகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றச்சாட்டி கைது செய்யப்பட்டு இன்று 9 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  அக்மீமன தயாரத்ன தேரர், டான் பிரியசாத்  உட்பட 7 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கபட்டுள்ளது.

கடல்மார்க்கமாக இலங்கைக்கு வந்த மியன்மாரைச் சேர்ந்த 30 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் நீதிமன்றத்தின் உத்தரவின்படி கல்கிசையில் உள்ள வீடொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.


இந்நிலையில் குறித்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் தங்கியிருந்த வீட்டுக்கு முன்னால் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் கலந்து கொண்ட  முக்கிய  புள்ளிகள் கைதாகி   இன்று 9 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  நிலையில் திர்வரும் 16 ஆம் திகதி வரை அவர்களின் விளக்கமறியல்  நீடிக்கபட்டுள்ளது.
இன்று விசாரணைக்கு வந்த வழக்கு.. அக்மீமன தயாரத்ன தேரர், டான் பிரியசாத் உட்பட 7 பேரின் விளக்கமறியல் நீடிப்பு. இன்று விசாரணைக்கு வந்த வழக்கு.. அக்மீமன தயாரத்ன தேரர், டான் பிரியசாத்  உட்பட 7 பேரின் விளக்கமறியல் நீடிப்பு. Reviewed by Madawala News on 10/09/2017 11:07:00 AM Rating: 5