Kidny

Kidny

இன்று விசேட பாராளுமன்ற அமர்வு

இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகம் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு இன்று விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விசேட அமர்வு இன்று பிற்பகல் 2.30க்கு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
இதில் சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் , செயலாளர்கள் , சபாநாயகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர். 
பாராளுமன்றத்தின் 70 வருட நிறைவை முன்னிட்டு முத்திரை வெளியிடப்படவுள்ளது.
1947ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தின் முதற் கூட்டம் இடம்பெற்றது. அரச மந்திரிகள் சபையின் சபாநாயகராக கடமையாற்றிய பிரான்சிஸ் மொலமுரே இலங்கையின் முதலாவது பாராளுமன்ற சபாநாயகராக தெரிவானார்.

கடந்த 7 தசாப்தங்களில் இலங்கை அபிவிருத்திக்காகவும், சுபீட்சத்திற்காகவும் பல சட்டதிட்டங்களை நிறைவேற்ற பாராளுமன்றத்தால் முடிந்தது என்று சமகால சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு உரையாற்றினார்.
பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு 70 ஆண்டுகள் பூர்த்தியாகும் இத்தருணத்தில் தேசத்தின் முன்னிலையில் பல சவால்கள் உள்ளன. இவற்றை வெற்றி கொள்வதற்கு பாராளுமன்றம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.

இன்று விசேட பாராளுமன்ற அமர்வு  இன்று விசேட பாராளுமன்ற அமர்வு Reviewed by Madawala News on 10/03/2017 02:34:00 PM Rating: 5