Kidny

Kidny

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 75 % தொகுதிகளை நாம் கைப்பற்றுவோம்..




உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் நாடு­பூ­ரா­கவும் உள்ள தேர்தல் தொகு­தி­களில் 75 சத­வீ­­மான தொகு­தி­களை
ஐக்­கிய தேசிய முன்­னணி கைப்­பற்றும் என்­­தனை தம­து ­கட்சி கணக்­கிட்­டுள்­­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­­லா­ளரும் அமைச்­­ரு­மான கபீர் ஹாஷிம் தெரி­வித்தார்.

அத்­துடன் வேட்­பா­ளர்­களை  தெரிவு செய்­­தற்­கான இறுதி தீர்­மானம் எடுப்­­தற்கு­
பி­­தமர் தலை­மையில் வேட்பு மனு குழு­வொன்று நிய­மிக்­கப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார்

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் கபீர் ஹாஷிம் மேலும் குறிப்­பி­டு­கையில்,

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­­லுக்கு தற்­போது நாம் தயா­ராகி வரு­கின்றோம். இதன்­படி மாவட்ட அடிப்­­டையில் வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­­தற்கு மாவட்­டங்கள் வாயி­லாக சிறி­கொத்தா வேட்­பாளர் தெரி­வு­க்குழு பய­ணித்த வண்ணம் உள்­ளது.இந்த வாரம் அநு­ரா­­புரம், பொல­­றுவை மாவட்­டங்­­ளுக்கு தெரி­வுக்­குழு பய­ணிக்­­வுள்­ளது.அதே­போன்று ஏனைய அனைத்து மாவட்­டங்­­ளுக்கும் பய­ணித்து வேட்­பா­ளர்­களை தெரிவு செய்ய திட்­­மிட்­டுள்ளோம்.

ஐக்­கிய தேசியக் கட்சி வேட்­பா­ளர்கள் தெரிவில் கிரா­மத்தில் உள்ள பிர­­லங்­களை கள­மி­றக்க திட்­­மிட்­டுள்ளோம்.இதன்­படி சிறி­கொத்தா தெரி­வு­க் கு­ழு­வினால் தயார் செய்யும் வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­­தற்­கான இறுதி தீர்­மானம் பிர­தமர் ரணில் விக்­கி­­­சிங்க தலை­மையில் நிய­மிக்கும் குழு­வினால் எடுக்­கப்­படும். விரைவில் குறித்த குழு நிய­மனம் செய்­யப்­படும்.

இந்­நி­லையில் தற்­போது கட்­சி­யினால் கணக்­கீடு ஒன்று செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த கணக்கின்படி நாடு­பூ­ரா­கவும் உள்ள தேர்தல் தொகு­தி­களில் 75 சத­வீ­­மான தொகு­தி­களை ஐக்­கிய தேசிய முன்­னணி கைப்­பற்றும். அத்­துடன் தற்­போது இந்த ஆட்­சியின் மீது ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரே நம்­பிக்கை இழந்­தது போல் செயற்­­டு­கின்­றனர். இரு வரு­டங்­களில் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்று அஞ்­சு­கின்­றனர்எனினும் நான் ஒன்றை கூற விரும்­பு­கின்றேன். நாம் இரு வரு­டங்­­ளுக்கு ஆட்சி செய்ய வர­வில்லை. இம்முறை அது நடக்­காது. 2020 ஆம் ஆண்டு ஆட்சி முடித்­துக்­கொண்டு விடாமல் 2025 வரையும் ஆட்­சியை கொண்டு செல்வோம். அது­மட்­டு­மல்­லாமல் 2025 ஆம் ஆண்­டுக்கு அப்­பாலும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்சியை கொண்டு செல்வோம்.


உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 75 % தொகுதிகளை நாம் கைப்பற்றுவோம்..  உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 75 % தொகுதிகளை நாம் கைப்பற்றுவோம்.. Reviewed by Madawala News on 10/06/2017 11:20:00 AM Rating: 5