Kidny

Kidny

வர்த்தகர் முஹம்மத் உமரின் 75 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கல் பொதி திரும்பக் கிடைத்தது. ஒருவர் சிக்கினார்.


பேருவளை சீனன்கோட்டை  பத்தை இரத்தினக்கல் வர்த்தக சந்தையில் கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி காணாமல்
போன 90 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கல் அடங்கிய பொதியை பேருவளை பொலிஸார் பேருவளைப்பகுதி இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரிடமிருந்து கைப்பற் றியுள்ளதுடன் அந்த வர்த்தகரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

  கொள்ளுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரின் இரத்தினக்கற்கள் அடங்கிய பொதியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

பேருவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜனக விதானவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட் டுள்ளதுடன் 75 இலட்சம் ரூபா பெறுமதியான இரத் தினக்கற்களும் கண்டெ டுக்கப்பட்டுள்ளன.

7 இலட்சம் ரூபா பெறு மதியான இரத்தினக் கல்லொன்றை சந்தேகநபரான வர்த்தகர் இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதுடன் அவர் தற்போது நாட்டைவிட்டுச் சென் றுள்ளார் என பொலிஸார் கூறினர்.

27 வைடுரிய கற்கள், 10 ஆறுநூல் கற்கள் உட் பட இன்னும் இரத்தினக் கற்கள் அடங்கிய பொதி காணாமல் போனவிதம் குறித்து அதன் உரிமை யாளரான கொள்ளுப்பிட் டியைச் சேர்ந்த முஹம்மத் காஸிம் முஹம்மத் உமர் தெளிவான விளக்க மொன்றை தனது முறைப் பாட்டின் மூலம் கூறி யுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன இரத்தினக்கற்கள் குறித்து  பொலிஸார் விசாரணை மேற்கொண்டிருந்த சமயம் பொலிஸாருக்கு அவசரமாகக் கிடைத்த தகவலொன்றையடுத்து சந்தேக நபர் கைது செய் யப்பட்டுள்ளார்.

குறித்த இரத்தினக் கற்கள் அடங்கிய பொதியை விழுந்திருந்த நிலையில் தான் எடுத்ததாக சந்தேக நபர் விசார ணையின் போது குறிப்
பிட்டுள்ளார்.

பேருவளை பொலிஸார் புலன்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தகர் முஹம்மத் உமரின் 75 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கல் பொதி திரும்பக் கிடைத்தது. ஒருவர் சிக்கினார். வர்த்தகர் முஹம்மத் உமரின்  75 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கல் பொதி திரும்பக் கிடைத்தது. ஒருவர் சிக்கினார். Reviewed by Madawala News on 10/30/2017 11:40:00 AM Rating: 5