Kidny

Kidny

இந்தியக் கப்பலிலிருந்த பணியாளர்கள் 7 பேர் மீட்பு


விபத்துக்குள்ளான Merchant Sailing Vessel என்ற இந்தியக் கப்பலிலிருந்த பணியாளர்கள் 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாக  
கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் லங்காநாத திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து மாலைதீவு நோக்கி பொருட்களுடன் சென்ற கப்பலே இவ்வாறு விபத்திற்கு உள்ளானது. 

இந்தக் கப்பலில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பு படகில் இருந்த போது நாட்டின் கடற்றொழில் வள்ளங்களின் உதவியுடன் இவர்கள் 20 ஆம்திபதி மீட்கப்பட்டு காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இவர்கள் இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். 

இந்தக் கப்பல் விபத்திற்கு உள்ளாகியிருப்பதாக மாலைதீவு அரசாங்கம் அறிவித்த தகவலுக்கு அமைவாக கப்பலைத் தேடுவதற்கும் அதிலிருந்த பணியாளர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது..

இந்தியக் கப்பலிலிருந்த பணியாளர்கள் 7 பேர் மீட்பு இந்தியக் கப்பலிலிருந்த பணியாளர்கள் 7 பேர் மீட்பு Reviewed by Madawala News on 10/21/2017 04:38:00 PM Rating: 5