Kidny

Kidny

உடதலவின்னை "AID 97 TRUST"அமைப்பின் ஆசிரியர் கௌரவிப்பு விழா.



உடதலவின்னை ஜாமிஉல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் 97 ஆம் ஆண்டு சாதாரன தரம் கற்ற மாணவ,மாணவிகளின்
அமைப்பான "AID 97 TRUST" ஊரின் கல்வி,சமூக நல மேம்பாட்டுத்திட்டங்களை கடந்த ஏழு வருடங்களாக மேற்கொண்டுவருகின்றனர்.


அமைப்பின் விடா முயற்சியால் ஆசிரியர்களை கெளரவித்து நினைவுச் சின்னங்களை வழங்கும் வைபவம் கடந்த 2017.10.22 ஞாயற்றுக் கிழமை மாலை 3.50க்கு ஜாமிஉல் அஸ்ஹர் அஷ்ரப் கேட்போர் கூடத்தில் மிக விமரிசையாக அரங்கேறியது.



நினைவுச் சின்ன முத்திரை ஒன்றும் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டதுடன் கடந்த கால செயற் திட்டங்கள்,எதிர்கால திட்ட வரைபுகள், அனுபவப் பகிர்வுக் காணொலிகள்,கவிதை போன்ற நிகழ்ச்சிகள் நிகழ்வை அழகுபடுத்தியது.

தகவல் -றிஸ்மி ராஸிக்
கலகெதர.
உடதலவின்னை "AID 97 TRUST"அமைப்பின் ஆசிரியர் கௌரவிப்பு விழா.  உடதலவின்னை "AID 97 TRUST"அமைப்பின் ஆசிரியர் கௌரவிப்பு விழா. Reviewed by Madawala News on 10/24/2017 03:09:00 PM Rating: 5