Kidny

Kidny

இங்கிலாந்தில் ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன்புரி சங்கத்தின் 13 ஆம் வருடாந்த பொதுக் கூட்டம்.


ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன் புரி சங்கத்தின் 13 ம் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்  வரும் சனிக் கிழமை
மாலை சிலாவ் நகரில் அமைந்துள்ள இலங்கையர்கள் நிர்வாகிக்கும் ஜன்னத் பள்ளிவாயலில் இடம் பெறவுள்ளது.


‘’உலகெங்கும் பறந்து சென்றாலும் பிறந்த ஊரை மறந்து விடாதீர்கள்’’ என்ற மோடோப் படி இங்கிலாந்தில்  வாழ்ந்தாலும்,தாம் பிறந்து வளர்ந்த  ஊரை நினைவில் வைத்து ஒரு தசாப்தத்துக்கும் மேலாக மடவளை பஸாரில் பல் வகை  நலன் பூரி வேளைகளில்  வெற்றிகரமாக பணியாற்றி வரும் நலன் பூரி அமைப்பே ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன் புரி சங்கமாகும்.


இங்கிலாந்தில் வாழும் மடவளை பஸார் மக்கள், பிற ஊர்களை சேர்ந்த நலன் விரும்பிகள், கொடை வள்ளல்கள் என பலரும்  தமது   ஊருக்கு உதவிகள் புரிவதோடு,இங்கு  தமக்கு  மத்தியில்   அன்போடும் சகோதரத் துவமாகவும், பரஸ்பர உதவி புரிந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடும் 2005 ஜனவரி மாதத்தில் உருவாக்கப் பட்டதே இந்த நலன் புரி சங்கமாகும்.
இறைவனின் துணையால் மருத்துவ மனை, வாசிகசாலை, வாசிகசாலைக்கான புத்தகங்கள்,பாடசாலைக் கட்டிடம்கள்,மதரசா கட்டிடம்கள்,மல சல கூடங்கள், புலமைப் பரிசில்கள்,கல்வித் பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர்தர செமினார் வகுப்புகள், புதிதாக இஸ்லாத்தில் வந்தோருக்கான வீடுகள், ஏழை மக்களுக்கான வீடுகள்,விளையாட்டு உபகரணங்கள்,ஏழை மாணவர்களுக்கான வகுப்பறை உபகரணங்கள்,நோயாளிகளுக்கு காண கொடுப்பனவுகள்,அவசர சத்திர சிகிட்சைக்கான கொடுப்பனவுகள்,அங்கவீனர்களுக்கான விசேட வகுப்புக்கள், அவற்றின்  ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள்,விதவைத் தாய் மார்களுக்கான கொடுப் பனவுகள்,என பல்வகையான நலன் புரி வேலைகளை இனம், மதம், பாகு பாடின்றி  ஓயாமல் செய்து வருகிறது.


இங்கிலாந்தின் சகல பாகங்களில் இருந்தும் மடவளை வாழ் மக்களும் அவர்களின் நண்பர்களுமாக சுமார் 4௦௦ பேர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர் என்று நிகழ்ச்சி ஏட்பாட்டாளர்கள் அறியத்  தருகிறார்கள்.

தகவல் தருபவர்
தலைவர்: பஸ்லி ஷகூர்
ஆக்கம்: ஷேய்க் முஹம்மது இஸ்மாயில் நளீமி


இங்கிலாந்தில் ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன்புரி சங்கத்தின் 13 ஆம் வருடாந்த பொதுக் கூட்டம். இங்கிலாந்தில் ஐக்கிய இராச்சிய மடவளை பஸார் நலன்புரி சங்கத்தின் 13 ஆம் வருடாந்த பொதுக் கூட்டம். Reviewed by Madawala News on 10/19/2017 03:10:00 PM Rating: 5