Kidny

Kidny

அஜ்மல் அஸீஸின் கண்டுபிடிப்புகளுக்கு விருது வழங்கி கௌரவித்த ருஹுணு பல்கலைக்கழகம். நாமும் வாழ்த்துகிறோம்.


ருஹுணு பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் கண்டுபிடிப்புகள் மற்றும் புத்துருவாக்கங்களுக்கான கண்காட்சியான RIIE 2017
இல் பல்கலையின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர் சகோதரர் Ajmal Azees இன் இரு கண்டுபிடிப்புகளுக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது ருஹுணு பல்கலைக்கழகம். மா ஷா அல்லாஹ்.

நுண்மதி பாதுகாப்புத் தொகுதி (Intelligent Security System) என்ற
இவரது கண்டுபிடிப்புக்கு சிறப்பு விருதும், மீதிறன் வழங்கி அறைக் கண்காணிப்பு கட்டுப்பாட்டுத் தொகுதி (Smart Server Room Monitoring and Controlling System) என்ற கண்டுபிடிப்புக்கு மூன்றாவது பரிசும் கிடைத்துள்ளன.

பரகஹதெனியவை பிறப்பிடமாகக் கொண்ட அஜ்மல் அஸீஸ் பரகஹதெனிய தேசிய பாடசாலை மற்றும் குருநாகல் புனித ஆனா கல்லூரி ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவர் ஆவார்.

பன்முக ஆளுமையாக வளர்ந்து வரும் இந்த 25 வயது இளைஞர் 2014 மற்றும் 2015 ஆண்டுகளின் க.பொ.த. (உ/த) இரசாயனவியல் பல்தேர்வு வினாக்களுக்கான விளக்கவுரைகளை இலகு நடையில் எழுதி நூலுருவில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மூன்றாவது நூலும் கூடிய விரைவில் வெளிவரவுள்ளதாக அறிகிறோம்.

தாம் வாழும் சூழலில் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படாத எத்தனையோ இளைஞர்கள் போன்று இலைமறைகாயாய் இருந்த அஜ்மல் இன்று நாடளாவிய ரீதியில் பல சாதனைகளை நிகழ்த்தி தனது ஆளுமையை நிரூபித்து வருகிறார்.

சர்வதேச அளவிலும் தடம் பதித்துள்ள அஜ்மல் இவ்வாண்டு தாய்லாந்தில் நடைபெற்ற பொறியியல் தொழினுட்பம் மற்றும் சமூக விஞ்ஞானங்களுக்கான  சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு தனது ஆய்வினை சமர்ப்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை, இன் ஷா அல்லாஹ்.

விடாத முயற்சியும், அடாத பயிற்சியும் கொண்டு தனது துறையில் நாளுக்கு நாள் மெருகேறி வரும் இவர் போன்ற துடிப்புள்ள இளைஞர்களே எமது சமூகத்தின் இன்றைய தேவை.

இன்னும் பல வெற்றிகள் பெற்று துறைசார் விற்பன்னராக வளர்ந்து  மென்மேலும் மிளிர அஜ்மல் சகோதரருக்கு எமது உளங்கனிந்த வாழ்த்துகள்!

- By: ரிம்சான் அமானுல்லாஹ் -

அஜ்மல் அஸீஸின் கண்டுபிடிப்புகளுக்கு விருது வழங்கி கௌரவித்த ருஹுணு பல்கலைக்கழகம். நாமும் வாழ்த்துகிறோம். அஜ்மல் அஸீஸின் கண்டுபிடிப்புகளுக்கு விருது வழங்கி கௌரவித்த ருஹுணு பல்கலைக்கழகம். நாமும் வாழ்த்துகிறோம். Reviewed by Madawala News on 10/21/2017 07:04:00 AM Rating: 5