Kidny

Kidny

புதிய அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் அனைவரும் இனவாதிகள். மதவாதிகள்.


ஏ.ஆர்.ஏ.பரில்-

இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டி நாட்டில் பிரச்சினைகளை உருவாக்க முயற்சிப்பவர்களே புதிய
அரசியலமைப்பு நாட்டை துண்டாடுவதற்காகவே கொண்டுவரப்படுகிறது என்று பிரசாரம் செய்கிறார்கள்.

ஆனால் புதிய அரசியல மைப்பு இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட் டுள்ளது.

பிரதான இருகட்சிகள் இணக்கம் தெரிவிக்கும் அரசியலமைப்பை நாம் ஏற்றுக்கொள்வோம் என தமிழ்தேசியக் கூட்டமைப்பும் தெரிவித்திருக்கிறது.
 என கல்வி யமைச்சர் அகில விராஜ் காரிய வசம் தெரிவித்துள்ளார்.


கல்வியமைச்சர் சிங்கள ஊட கமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதாக நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்குத் தெரிவித்திருந்தோம்.

 நாம் வழங்கிய உறுதிமொழிகளுக்காகவே மக்கள் எமக்கு வாக்களித்து அதிகாரத்தைக் கையளித்தார்கள். எமது முன்னேற்பாடுகளை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இடைக்கால அறிக்கையில் தவறுகள் இருந்தால் அவற்றைச் சுட்டிக் காட்ட முடியும். மகாநாயக்க தேரர்களுக்கு இடைக்கால அறிக்கையில் முரண்பாடுகள் இருந்தால் அவற்றை திருத்திக் கொள்வதற்கு சந்தர்ப்பம் உண்டு.

ஆனால் இடைக்கால அறிக்கையை வாசித்துவிட்டு புதிய அரசியலமைப்பு தேவை யில்லை எனக்கூறுவது தவ றாகும்.

புதிய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முழுமையாக இல்லாமற் செய்யவேண்டும் என் பது ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு அல்ல. புதிய அர சியலமைப்பின் மூலம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை மேலும் குறைக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம்.

ஏனென்றால் எதிர்காலத்தில் ஜனாதிபதி ஆசனத்தில் வேறெவராவது அமர்ந்தால் அந்த அதிகாரங்களினால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

உள்ளூராட்சிமன்ற தேர்த லுக்கு இப்போது எல்லாம் தயாராக உள்ளன. குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. இறுதிக்கட்டத்திலே நாம் இருக்கின்றோம்.

விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து ஏனைய தேர்தல் களையும் அடுத்த வருடம் நடத்துவோம்.

நல்லாட்சி அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் இயலுமென்றால் தேர்தலில் வெற்றியீட்டிக் காட்டட்டும்.

கல்வித்துறையில் இப்போது எந்தப் பிரச்சினைகளுமில்லை. பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டன.

களவு, கமிஷன் பெறுவது, ஊழல் என்பவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் இடமாற்றங்களில் அரசியல் கலக்கப்படவில்லை.

இடமாற்றங்களில் எவருக்கும் அநீதி இடம்பெற்றிருந்தால் அவர்கள் மேன்முறையீடு செய்யலாம் என்றார்.

புதிய அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் அனைவரும் இனவாதிகள். மதவாதிகள். புதிய அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் அனைவரும் இனவாதிகள். மதவாதிகள். Reviewed by Madawala News on 10/24/2017 01:51:00 PM Rating: 5