Kidny

Kidny

காலநிலை மாற்றம்.. யாழ் தீவகத்தை அழகு படுத்தும் வெளிநாட்டு பறவைகள்.


-பாறுக் ஷிஹான்-
யாழ் தீவக பகுதியில் தற்போது  ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின்  காரணமாக வெளிநாட்டு பறவை
இனங்கள்  சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

ஊர்காவற்துறை அல்லைப்பிட்டி சாட்டி வேலணை மண்டைதீவு ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர்  நிலைகளை நாடி இந்த  வெளிநாட்டு  பறவை இனங்கள்  வருகை தருகின்றன.

 இதனால்  வெளிநாட்டிலிருந்து வரும் குறித்த பறவையினங்களை இரசிப்பதற்காக பலரும் குறித்த இடத்திற்கு வருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்

இதில் நாரை இனங்கள் அன்னப்பறவை   உள்ளிட்ட பறவையினங்கள்  காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றம்.. யாழ் தீவகத்தை அழகு படுத்தும் வெளிநாட்டு பறவைகள். காலநிலை மாற்றம்.. யாழ் தீவகத்தை அழகு படுத்தும் வெளிநாட்டு பறவைகள். Reviewed by Madawala News on 10/31/2017 03:13:00 PM Rating: 5