Ad Space avaiable

குடிக்கு அடிமையாகி விட்டேன். தந்தை மற்றும் மனைவியை கவனிக்க முடியவில்லை.


மதுவிற்கு அடிமையானதால், தனது தகப்பனையும் மனைவியையும் கவனிக்க முடியவில்லை என்ற மனக்கவலையால் நபரொருவர் கடித மொன்றினை எழுதிவைத்து விட்டு,சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்,பதுளை பிரதேச கஹட்டருப்ப என்ற இடத்தில் இடம் பெற்றுள்ளது.

கஹட்டருப்ப என்ற இடத்தைச் சேர்ந்தஅசித்த நிரோசன நலிந்த திசாநாயக்க என்ற 26 வயது நபரே, தற்கொலை செய்து கொண்டவராவார். இந் நபர் கொழும்பில் ஒரு நிறுவனமொன்றில் சேவை செய்து வந்துள்ளார்.

தொழிலுக்கு சென்ற பின்னர், அந்நபர் மதுவிற்கு அடிமையாகியிருந்தார். இதனால், அவர் உழைக்கும் வேதனம் முழுவதையும் மதுவிற்கே செலவு செய்து வந்துள்ளார்.

இதனால், அந்நபரின் தகப்பனினதும், மனைவியினதும் வாழ்க்கைச் செலவிற்கும் பணம் அனுப்பமுடிய வில்லை.

இதுவிடயத்தில் மனமுடைந்திருந்த அந்நபர் இம் முடிவிற்கு வந்துள்ளமை ஆரம்ப விசாரணை களிலிருந்து தெரியவந்துள்ளது.

மரண விசாரணையின் போது, தற்கொலைசெய்துகொண்டவரினால் எழுதப்பட்ட கடிதமொன்றும், மரண விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக் கப்பட்டது.
குடிக்கு அடிமையாகி விட்டேன். தந்தை மற்றும் மனைவியை கவனிக்க முடியவில்லை. குடிக்கு அடிமையாகி விட்டேன். தந்தை மற்றும் மனைவியை கவனிக்க முடியவில்லை. Reviewed by Madawala News on 10/12/2017 09:54:00 AM Rating: 5