Kidny

Kidny

கடலில் 259 ஏக்கர் நிலப்பரப்பை உருவாக்கி நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகரம் 50 வீத வேலைகள் முடிந்தன.


கொழும்பு துறைமுக நகரம் அமையப்பெறும் பிரதேசம் இலங்கையின் ஒரு பகுதியாக அறிவிக்கப்படுமென மேல் மாகாண
அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மொத்தமாக கடலில் 259 ஏக்கர் நிலப்பரப்பை உருவாக்கி நிர்மாணிக்கப்படும் இந்த நகரத்திற்கான பணிகளை சீன நிறுவனம் மேற்கொண்டுவருவதோடு, இதன் பங்குதாரராக இலங்கை அரசாங்கம் செயற்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடல் நீரை மண்ணால் நிரப்பி நிலத்தினை உருவாக்கும் பணிகள் 50 வீதம் பூர்த்தியடைந்துள்ளதோடு, நில உருவாக்கப் பணிகள் முழுமை பெற்றதும் இந்த பிரதேசத்தை இலங்கையின் ஒரு பகுதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துறைமுக நகரத்தை நாட்டின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதற்கான சட்டரீதியான பணிகளை பிரதமர் அலுவலகம் தற்போது மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர், நில உருவாக்கப் பணிகள் நிறைவடைந்ததும் அதற்கு சட்ட அங்கீகாரத்தை வழங்குவது அவசியமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2019ஆம் ஆண்டில் கடல் நீரை நிரப்பி நிலத்தை உருவாக்கும் பணிகள் நிறைவடையுமெனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடலில் 259 ஏக்கர் நிலப்பரப்பை உருவாக்கி நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகரம் 50 வீத வேலைகள் முடிந்தன. கடலில் 259 ஏக்கர் நிலப்பரப்பை உருவாக்கி நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகரம் 50 வீத வேலைகள் முடிந்தன. Reviewed by Madawala News on 10/26/2017 11:14:00 AM Rating: 5