Kidny

Kidny

எப்படியெல்லாம் மோசடி பண்றாய்ங்க .. !


புதையல் மூலம் பெறப்பட்ட சிறிய  தங்க பந்துகள் 1150 உள்ளது   எனக் கூறி, அவற்றை 45 இலட்சம் ரூபாவுக்கு விற்க
முற்பட்ட நபர் ஒருவர் தம்புள்ளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இவர் கெக்கிராவ - கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்தவராகும்.

அத்துடன், இதற்கு முன்னரும் கெக்கிராவ, அனுராதபும், மிகிந்தலை போன்ற பகுதிகளில், புதையல் பொருட்கள் எனக் கூறி, போலியாக தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்கும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது என, தம்புள்ளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபரை கைப்பற்றப்பட்ட  போலி தங்கங்களுடன் தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எப்படியெல்லாம் மோசடி பண்றாய்ங்க .. ! எப்படியெல்லாம் மோசடி பண்றாய்ங்க .. ! Reviewed by Madawala News on 10/25/2017 12:12:00 PM Rating: 5