Kidny

Kidny

தொடரும் மடவளை மதீனா தேசிய பாடசாலை மைதானத்தின் அவலம். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 4 மில்லியன் ரூபா.


4 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டதாக கூறப்படும் மடவளை மதீனா தேசிய பாடசாலை மைதானாம்
தற்பொழுது வயல் நிலத்தைவிடவும் படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கீழே காணப்படும் புகைப்படங்கள் அதற்கு சாட்சி பகிர்கின்றன.

முன்னைய காலங்களில் எவ்வளவு மழை பெய்தாலும் விளையாடக்கூடிய நிலையில் இருந்த மைதானம் தற்பொழுது காலடி கூட வைக்கமுடியாத அளவு சேரும் சகதியுமாக இருப்பதை மேல உள்ள படங்களில் காணலாம்.


புனரமைப்பு பணிகளின் நிரப்பப்பட்ட மண்ணிலிருந்து இருந்து போத்தல் ஓடுகள் மட்டும் தகர துண்டுகள் வெளிப்பட்டு இருப்பதால் மைதானத்தில் விளையாடும் பலர் காயங்களுக்கும் உபாதைகளுக்கும் உள்ளாகியுள்ளனர்.

மேலும் மைதானத்தில் இருந்த கிரிகெட் பயிற்சி வலை (practise net) முற்றாக தரைமட்டமாக்கப்பட்டது. அதற்கு மாற்றீடாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அன்மையில் நடந்து முடிந்த 13 வயதுக்கு உற்பட்டவர்களுக்கான கிரிகெட் போட்டித்தொடரில் மதீனா அணி வரலாறு காணாத படு மோசமான தோல்விகளை சந்தித்தது.


சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானம் ஆண்டி என்பதுபோல விளையாடக்கூடிய நிலையில் இருந்த மைதானத்தை புனரமைப்பு என்ற பேரில் எவருக்குமே பிரயோசனமற்ற நிலையில் காணப்படுவது ஊரின் மேல் அன்பு வைத்திருக்கும் பலருக்கு பெறும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த புனரமைப்பு பணிகளை முன்னின்று செயற்படுத்தியவர்களே! தயவு செய்து மடவளையின் பெரும் சொத்தான மைதானத்தை அனைவரும் பிரயோசனம் அடையும் வண்ணம்  சீரமைத்தி தருமாரு வேண்டிக்கொள்கிறோம்.

படங்கள் : இன்று எடுக்கபட்டவை.
தகவல் : முகம்மத் நஜ்மி ( மடவளை மதீனா கிரிக்கட் பயிற்சியாளர்
Image may contain: tree, sky, grass, plant, outdoor and nature
Image may contain: plant, shoes, tree, outdoor and nature
Image may contain: shoes, plant, outdoor and nature
Image may contain: plant, shoes, tree, outdoor, nature and water
Image may contain: plant, grass, outdoor and nature
Image may contain: outdoor
Image may contain: plant, outdoor and nature
Image may contain: outdoor
Image may contain: plant, tree, grass, sky, outdoor and nature
Image may contain: tree, sky, house, outdoor and nature
Image may contain: plant, tree, outdoor, nature and water

தொடரும் மடவளை மதீனா தேசிய பாடசாலை மைதானத்தின் அவலம். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 4 மில்லியன் ரூபா. தொடரும் மடவளை மதீனா தேசிய பாடசாலை மைதானத்தின் அவலம். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 4 மில்லியன் ரூபா. Reviewed by Madawala News on 10/28/2017 11:18:00 PM Rating: 5