Kidny

Kidny

குடிசைக் கைத்தொழில் ரேஞ்சில் துப்பாக்கி தயாரிப்பு மற்றும் விற்பனை.. ஒருவர் சிக்கினார்.


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் துப்பாக்கி தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரை இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபர் வசம் இருந்து 10 துப்பாக்கிகள் 2000 ரவைகள், துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, இவர் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு துப்பாக்கி விற்பனை செய்த ஒருவர் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
குடிசைக் கைத்தொழில் ரேஞ்சில் துப்பாக்கி தயாரிப்பு மற்றும் விற்பனை.. ஒருவர் சிக்கினார். குடிசைக் கைத்தொழில் ரேஞ்சில் துப்பாக்கி தயாரிப்பு மற்றும் விற்பனை.. ஒருவர் சிக்கினார். Reviewed by Madawala News on 10/04/2017 10:36:00 AM Rating: 5