Kidny

Kidny

ஜப்பான் ஆசைகாட்டி சுமார் 5 கோடி ரூபா பண மோசடி செய்த பெண் '' ஆவணங்களுடன்'' சிக்கினார்.


ஜப்பானில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, சுமார் 5 கோடி ரூபா  பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும்
பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடவத்தை - சூரியபாலுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, தமது அதிகாரிகள் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளதாக, வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கைதான போது, குறித்த பெண் வசம் இருந்து போலி இறப்பர் முத்திரைகள் 14, விமான டிக்கெட்டுக்கள் 80 மற்றும் ஜப்பானில் வேலை பெற்றுத் தருவது குறித்த ஒப்பந்தங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேகநபரை மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜப்பான் ஆசைகாட்டி சுமார் 5 கோடி ரூபா பண மோசடி செய்த பெண் '' ஆவணங்களுடன்'' சிக்கினார். ஜப்பான் ஆசைகாட்டி சுமார் 5 கோடி ரூபா  பண மோசடி செய்த பெண் '' ஆவணங்களுடன்'' சிக்கினார். Reviewed by Madawala News on 10/16/2017 06:59:00 PM Rating: 5