Kidny

Kidny

சிங்கப்பூர் தேசிய அணியை வென்றது கண்டி அணி . (படங்கள்)

- ஜே.எம்.ஹபீஸ்-

இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் தேசிய றகர் அணிக்கும் பிரபல கண்டி விளையாட்டுக்கழக றகர் அணிக்குமிடையிலான சினேக பூர்வ றகர் போட்டியில் கண்டி விளையாட்டுக்கழகம் அமோக வெற்றி ஈட்டியது.
(21.10.2017)

கண்டி நித்தவலை றகர் மைதானத்தில் இடம் பெற்ற மேற்படி போட்டியில் கண்டி அணி 44-ற்கு 14 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி ஈட்டியது.

இடைவேளையின் போது கண்டி அணி 22-7 என்ற அடிப்படையில் முன்னிலை வகித்தது.

கண்டி அணி மொத்தம் 6 ட்ரைகளைப் பெற்று அதில் 4 ற்கு மேலதிகப் புள்ளிகளைப் பெற்றுக் கொண்டதுடன் 2 பெனல்டிகளையும் பெற்று மொத்தம் 44 புள்ளிகளைப் பெற்றது.

சிங்கப்பூர் தேசிய அணி 2 ட்ரைகளையும் அதற்கான மேலதிகப்புள்ளகளையும் பெற்று மொத்தம் 14 புள்ளிகளை மட்டுமே பெற்றுக் கொண்டது.

சிங்கப்புர் அணிசார்பாக 40 வது நிமிடத்தில் ஜொனாதன் பாபர் ஒரு ட்ரையைப் பெற்று அவரே அதற்கான மேலதிகப் புள்ளியையும் பெற்றுக் கொடுத்தார்.

பின்னர் 52 வது நிமிடத்தில் பீட்டர் வில்லியம் ஒரு ட்ரையைப் பெற அதற்கான மேலதிகப் புள்ளியை ஜொனாதன் பாபர் பெற்றுக் கொடுத்தார்.


கண்டி அணியைப் பொருத்தவரை 15வது நிமிடத்தில் பாசில் மரீஜா முதலாவது ட்ரையைப் பெற்றுக் கொடுக்க அதற்கு நைஜில் ரத்வத்தை மேலதிகப் புள்ளியைப் பெற்றுக் கொடுக்க 7-0 என்ற அடிப்படையில் புள்ளிப் பதிவுகள் ஆரம்பமாகின.


தொடர்ந்து 16 வது நிமிடத்தில் ரிச்சட் தர்மபாலவும், 25 வது நிமிடத்தில் அனுருத்த வில்லவராயவும்  47 வது நிமிடத்தில் மீண்டும் பாசில் மரீஜாவும் 50 வது நிமிடத்தில் தனுஷ்க ரஞ்சனும், 54வது நிமிடத்தில் நைஜில் ரத்வத்தையும் மொத்தம் 6 ட்ரைகளைப் பெற்றுக் கொடுத்தனர். அவற்றுள் 3 ற்கு நைஜில் ரத்வத்தையும் 1 ற்கு அர்சத் ஜமால்தீனும் மேலதிக புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தனர். அத்துடன் நைஜில்  ரத்வத்தை 2 பெனல்டிகளையும் இலக்குத் தவறாது அடித்தார்.


மொத்தம் 44-14 என்ற அடிப்படையில் கடந்த வருட டயலொக் கிண்ண மற்றும் கிளிபர்ட் கிண்ண இரட்டைச் செம்பியன்களான கண்டி அணிய அமோக வெற்றி ஈட்டியது.

போட்டிக்கு பிரியந்த குனரத்ன மத்தியஸ்த்தம் செய்தார்.


சிங்கப்பூர் தேசிய அணியை வென்றது கண்டி அணி . (படங்கள்) சிங்கப்பூர் தேசிய அணியை வென்றது  கண்டி அணி . (படங்கள்) Reviewed by Madawala News on 10/22/2017 08:54:00 AM Rating: 5