Kidny

Kidny

பாதிக்கபட்ட இலங்கை பணியாளர்களுக்கு குவைத் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 3.2 பில்லியன் ரூபாவுக்கு நடக்கும் கோல்மால்.


ஹஸன் இக்பால்-
குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பின் போது தொழில் வாய்ப்பை இழந்த இலங்கையர்களுக்காக குவைத்
அரசாங்கத் தினால் வழங்கப்பட்ட இழப்பீ டுகள் பகிர்ந்தளிக்கப்படுவதில் 3. 2 பில்லியன் ரூபா இன்னும் பகிர்ந்தளிக்கப்படாதுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1990 இல் குவைத் மீதான ஈராக் வேலைவாய்ப்பு பணியகம் அசமந்தமாக செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 ஐக்கிய நாடுகள் சபையின் இழப்பீடு ஆணையகம் இலங்கை பணியாளர்களுக்கு ஒதுக்கியுள்ள ஆக்கிரமிப்பின் போது பாதிக்கப்பட்ட குவைத்தில் பணியாற்றி வந்த இலங்கையர்களுக்கான இழப்பீட்டுத் தொகை ஐக்கிய நாடுகள் சபையின் இழப்பீடு ஆணையகத் தினால் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்திடம் கையளிக்கப்பட் டுள்ளது.

இருப்பினும், மேலதிக 3.2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தினால் இன்னும் பகிர்ந்தளிக்கப்படாது நிலுவையில் இருப்ப தாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை பகிர்ந்த ளிப்பதில் நியமமான முறைகளை இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் கொண்டிருக்கவில்லை என கணக்காளர் தலைமை அதிபதி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்னும் 3.2 பில் லியன் ரூபா நிதி உரியவர்களைச் சென்றடையாது நிலுவையாக உள் ளது.


நீண்டகால பொறுப்புக்களாக அடையாளப்படுத்துவதற்கு பதிலாக இந்நிதி வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மூலதன ஒதுக்கீடாக கணக்குகளில் தவறுதலாக காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


1990 மற்றும் 1991 காலப்பகு தியில் குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பினால் நேரடியாக பாதிக் கப்பட்டவர்களுக்கான சேதங்கள். இழப்புக்களுக்கான நட்ட ஈடுகளை வழங்குவதற்கென பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு அமை வாக 1991 ஆம் ஆண்டு உருவாக்கப் பட்டது.

2.7 மில்லியன் மக்களால் 352.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இழப்பீடுகள் கோரப் பட்டுள்ளதாக ஐ.நா. இழப்பீடுகள் ஆணையகத்தின் அறிக்கை தெரிவிக் கின்றது.

ஈராக் ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டோரில் 1.5 மில்லியன் மக்களினால் கோரப்பட்ட 52.4 பில் லியன் அமெரிக்க டொலர்கள் பெறு மதியான இழப்பீட்டுத் தொகை உரியவர்களிடம் 2005 ஆம் ஆண்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஆணை யகம் தெரிவித்துள்ளது.


வேறு பல இழப்பீடுகள் பகிர்ந் தளிப்பு தொட்ர்பிலும் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் அசமந்தமான நடவடிக்கைகள் தொடர்பில் கணக்காய்வாளர் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிநாட்டில் பணிபுரிவோர் தொடர்பில் 2012 இல் வேலை வாய்ப்பு பணியகத்தினால் காப்பு றுதி திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் பிரகாரம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாட்டில் பணியாற்றும் பணியாளர் அங்கு மரணிக்கும் பட்சத்தில் 4 இலட்சம்  ரூபா இழப்பீடாக கோரப்பட முடியும்.

எனினும், 2014 மற்றும் 2015 இல் வெளிநாட்டில் மரணித்த 281 பணியாளர்கள் தொடர்பில் 112.4 மில்லியன் ரூபா பெறுமதியான இழப்பீடுகள் இதுவரை வழங்கப்படவில்லை.

இதுபற்றி இழப்பீடு கோர தகைமை பெற்ற பணியாளர்களின் குடும்பங்களுக்கு அறிவுறுத்தப்படவும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கபட்ட இலங்கை பணியாளர்களுக்கு குவைத் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 3.2 பில்லியன் ரூபாவுக்கு நடக்கும் கோல்மால். பாதிக்கபட்ட இலங்கை பணியாளர்களுக்கு  குவைத் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 3.2 பில்லியன் ரூபாவுக்கு நடக்கும் கோல்மால். Reviewed by Madawala News on 10/25/2017 03:16:00 PM Rating: 5