Kidny

Kidny

நிர்மாணப்பணிகள் முடிவுக்கு வந்தது.. அடுத்த வாரம் திறக்கபடுகிறது இலங்கையின் அதிநவீன வசதிகளை கொண்ட சிறைச்சாலை .


இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அதிநவீன வசதிகளை கொண்ட சிறைச்சாலை அடுத்து வரும் வாரங்களில் திறக்கப்படவுள்ளது.

அதிநவீன வசதிகளை கொண்ட அங்குனுகொளபெலஸ்ஸ சிறைச்சாலை எதிர்வரும் 16ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நீதி அமைச்சர் தலதா அத்துகோரலவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

40 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள அங்குனுகொளபெலஸ்ஸ சிறைச்சாலையின் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் இந்த சிறைச்சாலை திறக்கப்படவிருந்த நிலையில் ஜனாதிபதி கலந்து கொள்ளாமையினால் அந்த நடவடிக்கை பிறப்போடப்பட்டுள்ளது.

நவீன வசதிகளை கொண்ட அங்குனுகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் 1200 கைதிகள் தடுத்து வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 500 சிறைச்சாலை ஊழியர்களுக்கான வசதிகள் அங்கு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த சிறைச்சாலை எதிர்வரும் 16ம் திகதி திறக்கப்படவுள்ள போதும், அதன் செயற்பாடுகள் இரு வாரங்களின் பின்னரே மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலை திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அங்குனுகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் நீச்சல் தடாகம் உள்பட பல நவீன வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
நிர்மாணப்பணிகள் முடிவுக்கு வந்தது.. அடுத்த வாரம் திறக்கபடுகிறது இலங்கையின் அதிநவீன வசதிகளை கொண்ட சிறைச்சாலை . நிர்மாணப்பணிகள் முடிவுக்கு வந்தது.. அடுத்த வாரம் திறக்கபடுகிறது இலங்கையின் அதிநவீன வசதிகளை கொண்ட சிறைச்சாலை . Reviewed by Madawala News on 10/04/2017 12:18:00 PM Rating: 5