Kidny

Kidny

முன் வைத்த காலை நாம் பின்வைக்க மாட்டோம்... நாட்டை மற்றொரு தடவை நரிக் கூட்டத்தின் கைகளில் ஒப்படைக்க மாட்டோம்.நாட்டில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி இளைஞர், யுவதிகளுக்கான நல்லதொரு எதிர்காலத்தைப்
பெற்றுக்கொடுப்பதோடு, கடனற்ற நாட்டை மக்களிடம் கையளிப்பதே அரசாங்கத்தின் ஒரே இலக்கு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

காலி மாவட்டத்தில் பத்தேகம நகரில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் கூறியதாவது:

மக்கள் நிர்க்கதியாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நாட்டைப் பொறுப்பேற்று மக்களை காப்பாற்றுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சி முன்னின்று பாடுபட்டது. எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்திலெடுத்தே சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரச்சினைகள், நெருக்கடிகள் குவிந்து கிடந்ததொரு நாட்டையே நாம் பொறுப்பேற்றோம். 2014ல் நாட்டின் கடன் பிரச்சினையை தீர்க்க முடியாமல் கடனைச் செலுத்துவதற்கு நிதி இன்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களை நிர்க்கதிக்குள் தள்ளிவிட்டு, தப்பியோடிவிட்டார்.

அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடிந்திருந்தால் நிச்சயமாக அன்று அவர் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் தேர்தலுக்குச் சென்றிருக்க மாட்டார்.

அத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் நாடு அழிவுக்குள் தள்ளப்படுவதை தடுத்து நாம் நாட்டைப் பொறுப்பேற்றோம். அதிகாரத்துக்கு வந்த கையோடு சகல பிரச்சினைகளையும் முடித்துவிடலாம் என எதிர்பார்க்க முடியாது. முதலில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழிவகைகளை தேடினோம். அதற்கான வியூகத்தை அமைத்தோம்.

அடுத்து பத்து வருடங்களாக எமது கட்சி ஆதரவாளர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக கவனம் செலுத்தினோம். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வெற்றியீட்டச் செய்வதே எமது பிரதான குறிக்கோளாக இருந்தது. அதற்காக ஜனநாயக சக்திகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தோம். எமது நாடடின் அரசியல் வரலாற்றில் முதற் தடவையாக பிரதான இரண்டு கட்சிகள் ஒன்றுபட்டு புதுப்பாதையில் அடியெடுத்து வைத்தன. அதில் மகத்தான வெற்றியையும் ஈட்டிக் கொண்டோம்.

 எமது முன்னைய ஆட்சிக் காலத் தில் (2002ல்) தான் காலிக்கான அதிவேக பாதையை அமைக்கத்திட் டமிடப்பட்டது. அதனை ஆரம்பமா கக்கொண்டு நாட்டிலுள்ள அனைத்து நகரங்களையும் இணைக்கக் கூடிய பாரிய திட்டத்தை வகுத்துள்ளோம்.

எத்தகைய சவால்கள், நெருக்குவா ரங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டாலும் நாம் முன்வைத்த காலை பின் வைக்கப்போவதில்லை.
நாட்டை மற்றொரு தடவை நரிக் கூட்டத்தின் கைகளில் ஒப்படைக்கமாட்டோம். இனிமேலும் நாட்டு மக்களை அவர்களால் ஏமாற்ற முடியாது.

கடந்த இரண்டு வருடங்களில் மேற்கொண்ட அபிவிருத்திச் செயற் பாடுகள் பற்றி நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூறத் தவறியது பெரும் குறைபாடே.

எதிர்த்தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்காததன் காரணமாக மக்கள் அவர்கள் கூறுவது சரியென எடைபோட முற்பட்டுள்ளனர். கட்சிக் கிளைகளூடாக கிராமங்கள் தோறும் வீடு வீடாகச் சென்று இரண்டு வருடங்களில் என்ன நடந்துள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

கட்சி ஆதரவாளர்களுக்கு இந்த விடயத்தில் பாரிய பொறுப்பு இருப்பதை மறந்துவிடக் கூடாது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
முன் வைத்த காலை நாம் பின்வைக்க மாட்டோம்... நாட்டை மற்றொரு தடவை நரிக் கூட்டத்தின் கைகளில் ஒப்படைக்க மாட்டோம். முன் வைத்த காலை நாம் பின்வைக்க மாட்டோம்... நாட்டை மற்றொரு தடவை நரிக் கூட்டத்தின் கைகளில் ஒப்படைக்க மாட்டோம். Reviewed by Madawala News on 10/17/2017 09:06:00 AM Rating: 5