Kidny

Kidny

பாராளுமன்றத்தை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்று நான் ஏன் கூறினேன் தெரியுமா?


பாராளுமன்றத்தை குண்டு வைத்து தகர்க்க வேண்டிய அளவுக்கு நிலை மைகள் மோசமாகிகியுள்ளன என்பதையே
நான் அவ்வாறு உவமித்தேனே தவிர உண்மையில் குண்டு வைத்து தகர்க்க நினைக்கவில்லை.

மாற்றுக்கருத்தை கூட விளங்கிக்கொள்ள முடியாத முட்டாள்தனமான அரசியல்வாதிகளே உள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இவர்களை என் பக்கம் திருப்பவே அவ்வாறு கூறினேன், எனது பொறியில் அவர்கள் சிக்கிவிட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என பாராளுமன்ற உறுப் பினர் விமல் வீரவன்ச கூறிய கருத்தின் பின்னர் அடுத்த பாராளுமன்ற அமர்வில் இது குறித்து சபையின் கவனத்தில் கொண்டுவந்து நடவடிக்கை எடுப்பதாக சபாநா யகர் கூறியுள்ள நிலையில், அதற்கு பதில் கூறும் வகையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் கூறுகையில்,

அதிகாரம் இல்லாத பாராளுமன்றம் ஒன்று இருந்து எந்த பிரயோசனமும் இல்லை. அவ்வாறு இருந்து எந்த செயற் பாடுகளையும் நாட்டுக்காக முன்னெடுக்க முடியாது என்பதையே நான் அவ்வாறு உவமையாக கூறினேன்.

 அதை விடுத்து பாராளுமன்றத்தை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் அவ்வாறான கருத்தினை கூறவில்லை. ஒரு விடயம் தொடர்பில் அதிகளவிலான கவனத்தினை ஈர்க்க அவ்வாறான வசனங் களை நாம் பாவிப்பதுண்டு.

பல்வேறு உவமைகளை நாம் கையாளுவோம், மாற்று வாக்கியம் ஒன்றை பயன்படுத்துவோம். நானும் இவ்வாறான சந்தர்ப்பத்தை எதிர் பார்த்தே காத்திருந்தேன்.

அதற்காகவே இவ்வாறன ஒரு கதையினை கூறினேன். அனைவரும் வியக்கும் ஒரு கருத்தினை கூறும் போது அது தொடர்பில் கவனம் திரும்பும். அதன் மூலம் விவாதம் நடத்தி தீர்வு காணும் வழி தென்படும்.

அதற்காகவே நான் அவ்வாறு கூறினேன். ஆகவே நான் கையாண்ட உபாயத்தில் இவர்கள் அனைவரும் சிக்கிவிட்டனர். எனது கருத்துக்கு அனைவரும் முக்கியத்துவம்கொடுத்துள்ளனர்.

நாட்டு மக்கள் எனது கருத்தினை அவதானித்துவிட்டனர். ஆகவே உண்மை என்னவென்பது தொடர்பில் ஒரு தேடல் ஆரம்பிக்கும்.

அதன் மூலமாக இந்த அர சாங்கத்தின் கபடத்தனம் வெளிவரும். அது மக்கள் மத்தியில் விமர்சனமாக மாறும். ஒரு விடயம் இருந்தும் அதில் அர்த்தம் இல்லை என்று அர்த்தப்படுத்தி கூறிய ஒரு விடயம் இன்றைய முட்டாள்தன அரசியல் வாதிகளுக்கும், சிவில் உறுப்பி னர்களுக்கும் விளங்கவில்லை என்றால் இவர்கள் அனைவருக்கும் சிங்களமொழி வகுப்பொன்று எடுக்கவேண்டிய நிலைமை உருவாகும்.

மாநாயக்க தேரர்கள் அனை வரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்து புதிய அரசியல் அமைப்பினை கொண்டு வர வேண்டாம் என கூறும் நிலையிலும் அதற்கு செவிமடுக்காது இவர்கள் முன்னெ டுக்கும் வேலைத்திட்டத்திற்கு நாம் இடம ளிக்க முடியுமா?

இந்த நாட்டில் அரசியல் அமைப்பு மட்டும் அல்ல பெளத்த கலாசாரம் என்ற ஒன்றும் உள்ளது. பெளத்த கொள்கைக்கு மதிப்பளிப்பதும், அதனை ஏற்று நடப்பதும் எமது பண்பாடாகும். இவை தெரியாத அரசியல்வாதிகள் கைகளுக்கு ஆட்சி சென்றவுடன் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்று நான் ஏன் கூறினேன் தெரியுமா? பாராளுமன்றத்தை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்று நான் ஏன் கூறினேன் தெரியுமா? Reviewed by Madawala News on 10/26/2017 12:28:00 PM Rating: 5