Kidny

Kidny

வாகன விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராற்றுவெளி கொழும்பு திருகோணமலை பிரதான வீதியில்
மோட்டார் சைக்கிளிலும் டிப்பர் வண்டியும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் இன்று(29)   உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து வந்த டிப்பருடனேயே மோட்டார் சைக்கிளில் வந்தவர் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் இராணுவ வீரரான அக்போபூர பகுதியைச் சேர்ந்த விக்ரமசிங்க (வயது30) எனவும் பொலிஸார் மேலும்தெரிவித்தனர்.

இரானுவத்தில் வீரராக பணிபுரிந்தவரான இவர் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த காலப்பகுதிக்குள்ளேயே இன்றைய தினம் இச்சம்பவம் இடம்பெற்றதாக விசாரணைகள் மூலம் தெரியவருகிறது.

சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் பிறேற அறையில் வைக்கப்பட்டதாகவும் விபத்து தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகன விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி. வாகன விபத்தில் ஒருவர் பரிதாபமாக  பலி. Reviewed by Madawala News on 10/29/2017 06:50:00 PM Rating: 5