Ad Space avaiable

அக்மீமன தயாரத்ன மற்றும் அருமேபொல ரத்னசார தேரருக்கு குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு நோட்டீஸ் .

மியான்மார் றோகிங்யா அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கல்கிஸையில் உள்ள வீட்டின் மீது தாக்குதல். நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் பேரில், வாக்குமூலம் அளிப்பதற்காக, தேரர்கள் இருவருக்கு, நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.  

அக்மீமன தயாரத்ன மற்றும் அருமேபொல ரத்னசார ஆகிய இருவரையுமே, இன்று (02) காலைவேளையில், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்​படி சம்பவம் தொடர்பில், பெண்ணொருவர் உட்பட, அறுவர் இதுவரையிலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் அவர்களில் நால்வர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அக்மீமன தயாரத்ன மற்றும் அருமேபொல ரத்னசார தேரருக்கு குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு நோட்டீஸ் . அக்மீமன தயாரத்ன மற்றும் அருமேபொல ரத்னசார தேரருக்கு குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு நோட்டீஸ் . Reviewed by Madawala News on 10/02/2017 08:55:00 AM Rating: 5