Kidny

Kidny

நெடுஞ்சாலையில் காட்டு யானைக் கூட்டம் தாக்கியதில் முஹம்மத் அனீஸ் (வயது 31) வபாத்.


மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில்  வெலிக்கந்தை எனுமிடத்தில் காட்டு யானைக் கூட்டம் தாக்கியதில் ஏறாவூர் மிச்நகரைச் சேர்ந்த மஹ்ரூப் முஹம்மத் அனீஸ் (வயது 31) என்பவர், இன்று (1) அதிகாலை உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ரெதீதென்னயில் உணவு விடுதி நடத்தி வந்தவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதிகாலை 4.30 மணியளவில் கடைக்குப் பொருட்கள்  வாங்குவதற்காக ரெதீதென்னயிலிருந்து வெலிக்கந்தைக்குச் சென்ற போது, யானைக் கூட்டம் வழிமறித்ததில் அவைகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
நெடுஞ்சாலையில் காட்டு யானைக் கூட்டம் தாக்கியதில் முஹம்மத் அனீஸ் (வயது 31) வபாத். நெடுஞ்சாலையில் காட்டு யானைக் கூட்டம் தாக்கியதில் முஹம்மத் அனீஸ் (வயது 31) வபாத். Reviewed by Madawala News on 10/01/2017 03:49:00 PM Rating: 5