Ad Space Available here

ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது நடத்தபட்ட தாக்குதல் பெளத்த மதத்திற்கு பெரும் அபகீர்த்தி.


அனர்த்தங்களில் சிக்கி பாதிக்கப் பட்ட அகதிகளை மனிதநேயத்துடன் அனுகி அவர்களுக்கு கைகொடுத்து உதவுவது மனிதர்கள் என்ற வகையில் அனைவரினதும் கடமையாகும்.

மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளுக்கு எதிராக மேற்கொள் ளப்பட்ட கெடுபிடிகள் காட்டுமிராண்டித் தனமானதாகும்.

இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இச்சம்பவத்தின் மூலம் பெளத்த மதத் திற்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக அகலவத்தை பாலின்தநுவர பெளத்த விகாரையின் அதிபதி பாணியங்கள ஆனந்த தேரர் கூறினார்.


உலக முதியோர் தினத்தை முன்னிட்டு ராஜித சேனாரத்ன மன்றம் ஏற்பாடு செய்த முதியோர்தின கெளரவிக்கும் நிகழ்வு அளுத்கமை பொது விளையாட்டரங்கில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் நேற்றுமுன்தினம் 01ம் திகதி நடை பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற் றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரை யாற்றுகையில்,

அண்மையில் கல்கிசையில் ரோஹிங்கியா அப்பாவி அகதிகள் மீது மேற் கொள்ளப்பட்ட மிகவும் கீழ்த்தரமான செயலை நாம் மனிதர்கள் என்ற வகையில் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அகதிகளாக வந்தவர் களை துன்புறுத்துவது மனிதாபிமானமற்ற மிகவும் இழிவான செயலாகும். பச்சிளம் குழந்தைகளை கையிலேந்திய அகதிப் பெண்களை பொலிஸார் டிரக் வண்டிகளில் ஏற்றப்பட்ட காட்சியைப் பார்த்து எவரும் மகிழ்ச்சியடைய முடியாது.

ஒரு சிலரின் இந்த ஈனச் செயல் மூலம் பெளத்தர்களை தலைகுனிய வைத்துவிட்டது. அதே போல் முழு உலகிலும் பெளத்த மதத்திற்கு பெளத்தர்க ளுக்கு அபகீர்த்தி ஏற்பட்டு விட்டது. ரோஹிங்கியா அகதிகள் குறித்து நான் ஏற்கனவே ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன். ஆர்ப்பாட்டம் செய்த பெளத்த பிக்குகளுக்கு அகதிகளின் நிலைமை பற்றி தெளிவுபடுத்தினேன்.

அவர்கள் கவனத்திற் கொள்ளாது இறுதியில் செய்ய வேண்டிய ஒரு வேலையை ஆரம்பத்திலேயே செய்து விட்டனர். இதன்மூலம் பெளத்தர்களைப் பற்றி முழு உலகிலும் தப்பபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது.

இந்த செயல் நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் நிகழ்ச்சியாகும். இதன் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்பதனை தேடிப் பார்க்க வேண்டும்.

பெளத்த மதம் அன்பு கருணையை போதிக்கின்றது. ஒரு பிக்கு அணியும் காவியுடை அன்பு கருணையை காட்டுவதாக, இருக்க வேண்டும். அகதிகளையும் அவர்களது சிறுவர்க ளையும் துன்புறுத்தி மனவேதனையடையச் செய்துள்ள ஒரு கவலையான நேரத்தில் நாம் உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை அனுகூடிடிக் கின்றோம்.
எமது எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் முன்மாதிரி காட்ட வேண்டும்.


ரோஹிங்கியா அகதிகள் பற்றி தவறான பிரசாரங்கள் முன்னெடுக் கப்பட்டுள்ளன. இது குறித்து மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இது தொடர்பில் மிக விரைவில் நான் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடாத்தி நாட்டு மக்களுக்கு தெளிவூட்டவுள்ளேன் என்றார்.

நிகழ்வில் மன்றத்தின் தலைவர் டாக்டர்சுஜாதா சேனாரத்ன, மேல் மாகாண சபை உறுப்பினர் இப் திகார் ஜெமீல் இலங்கை மருந்தக கூட்டுத்தாபன பணிப்பாளர் நாயகம் டாக்டர் எம்.எச்.எம். ரூமி, களுத் துறை பொலிஸ் அத்தியட்சகர் உபுல் நில்மினி ஆரியரத்ன, பேருவளை வலய கல்விப் பணிப்பாளர் கயா சிறீலால் விக்ரமஆரச்சி உட்பட அர சியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது நடத்தபட்ட தாக்குதல் பெளத்த மதத்திற்கு பெரும் அபகீர்த்தி. ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது நடத்தபட்ட தாக்குதல் பெளத்த மதத்திற்கு பெரும் அபகீர்த்தி. Reviewed by Madawala News on 10/03/2017 10:38:00 AM Rating: 5