Kidny

Kidny

கொள்ளையர்களின் குண்டுகளுக்கு இரையான தந்தை ரஷீத் அஹமத்தின் கனவை நிறைவேற்ற நீதிபதியாக நிமிர்ந்து நிற்கும் அஞ்சும் சைஃபி!


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

இந்தியாவின் முசஃபர் நகரில்
கொள்ளையர்களின் குண்டுகளுக்கு இரையான ரஷீத் அஹமத் என்பவரின் ஒரே மகள்
அஞ்சும் சைஃபி இன்று நீதிபதியாக நிமிர்ந்து நிற்கிறார்.

1992 ஆம் ஆண்டு. அப்போது அஞ்சும் சைஃபிக்கு நான்கு வயது. தந்தை ரஷீத் அஹமது முசபர் நகரில் உள்ள ஒரு மார்க்கெட்டில் ஒரு ஹார்டுவேர் கடை நடத்தி வந்தார். அங்கு வந்த ஒரு கொள்ளைக்கார கும்பல் அங்கிருந்த அனைத்து கடைகளையும் சூரையாடியது. அஹமது அந்த கும்பலை எதிர்த்து நின்றார். மேலும் அந்த கும்பல் கையில் இருந்த துப்பாக்கியால் அஹமதை சரமாரியாக சுட்டது. இதில் ரஷீத் அஹமத் பரிதாபமாக பலியானார்.

அஞ்சும் சைஃபிக்கு இன்றும் நினைவுண்டு தன் தந்தை மரணிக்கும்போது அஞ்சுமுக்கு நான்கு வயது, அஹ்மத், அஞ்சுமை ஒரு நீதிபதியாக பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டார். ஆம் தற்போது 29 வயதான அஞ்சும் உத்திர பிரதேச Public Service Commission (UPPSC) ல் தேர்ச்சி பெற்று ஜூனியர் நீதிபதியாக பதவி பெற்றுள்ளார்.

இதுகுறித்து அஞ்சும் சைஃபி தெரிவிக்கையில், " என் தந்தை அநீதிக்கு எதிராக போராடினார். ஆனால் அவருக்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை. கொள்ளையர்களுக்கே அனைவரும் துணை நின்றனர். இதனால் என் தந்தையின் உயிரை தியாகம் செய்ய வேண்டியதாயிற்று. என் தந்தைக்கு நான் நீதிபதியாகவேண்டும் என்பதுதான் கனவு. அந்த நான்கு வயது பருவத்தில் என் தந்தை என்னிடம் கூறியது இன்றும் மறக்கவில்லை. என் இலக்கு அதுவாகவே இருந்தது. என் தாயும், சகோதரர்களும் எனக்காக நின்றனர். இன்று நீதிபதியாக உயர்ந்துள்ளேன். நிச்சயமாக என் தந்தையின் கனவை மேலும் நிறைவேற்றுவேன்" என்றார் பெருமையாக.

மேலும் அஞ்சுமின் மூத்த சகோதரர் தில்ஷாத் அஹமது (40) கூறுகையில், "எங்கள் தங்கைக்காக நாங்கள் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. அவளின் ஆவல் இலக்கு நிறைவேற வேண்டும் என்று நினைத்தோம். அதற்காக பல கஷ்டங்களை அனுபவித்தோம். இப்போது மகிழ்வாக உள்ளது." என்றார்.
கொள்ளையர்களின் குண்டுகளுக்கு இரையான தந்தை ரஷீத் அஹமத்தின் கனவை நிறைவேற்ற நீதிபதியாக நிமிர்ந்து நிற்கும் அஞ்சும் சைஃபி! கொள்ளையர்களின் குண்டுகளுக்கு இரையான தந்தை  ரஷீத் அஹமத்தின் கனவை நிறைவேற்ற  நீதிபதியாக நிமிர்ந்து நிற்கும் அஞ்சும் சைஃபி! Reviewed by Madawala News on 10/19/2017 02:30:00 PM Rating: 5