Kidny

Kidny

உயிரிழந்த முஹம்மது அஸ்ஜத்தின் சோக பின்னணியும், விசாரணை அப்டேட்களும்...


தலவாக்கலையில் உயிரிழந்த புத்தளம் இளைஞனின் இரத்தமாதிரிகள், பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கபபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் உட்கொண்ட உணவில் ஏதேனும் நச்சுப்பதார்த்தங்கள் கலக்கப்பட்டுள்ளதா என்பதைக்கண்டறிவதற்காகவே இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.


தீபாவளியை முன்னிட்டு புத்தளத்தில் இருந்து தலவாக்கலைக்கு வர்த்தக நடவடிக்கைக்காக குழுவினருடன் சென்ற இளைஞன் கடந்த (17) முதல் காணாமல் போன நிலையில் அவரது ஜனாஸா கடந்த சனிக்கிழமை கொத்மலை நீர்த்தேக் கத்திலிருந்து மீட்கப்பட்டது.

புத்தளம் கல்பிட்டி கண்டல்குடா எனும் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது நிலாம்தீன் முஹம்மது அஸ்ஜட் (வயது 18) என்ற இளைஞரின் ஜனாஸாவே இவ்வாறு மீட்கப்பட்டது.

கல்பிட்டி கண்டல்குடா பிரதேசத் தைச் சேர்ந்த இவ்விளைஞன் மூன்று ஆண்களும், இரண்டு பெண்களை குடும்பத்தில் மூத்தவராவார்.

இவரது தந்தை கடற்றொழிலாளியாவார். தனது குடும்ப வறிய  நிலையின் காரணமாகவே இவர் இவ்வாறு கல்பிட்டி - பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரக் குழுவினருடன் அவர்களது வாகனத்தில் வீட்டிலிருந்து கடந்த 22 நாட்களுக்கு முன்னர் தலவாக்கலை பகுதிக்குச் சென்றுள்ளார்.

 இந்த குழு தலவாக்கலை நகர சபையின் கடை ஒன்றை வாடகைக்காக பெற்று ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியின் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வர்த்தக நடவடிக்கை யில் ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கழிப்பறை செல்வதாக கூறிவிட்டு சென்ற இளைஞன் மீண்டும் உரிய இடம் திரும்பியிருக்கவில்லை. இது தொடர்பில் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் அக்குழுவினரினால் முறைப்பாடு செய்யப்பட்டது.


திடீரென காணாமல் போன குறித்த இளைஞனுக்கு என்ன நடந் தது என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது பற்றி இவ்விளைஞரின் தந்தை கூறியதாவது,
 தனது மகன் வியாபார நடவ டிக்கைகளுக்காக ஒரு குழவினருடன் சென்றிருந்தார். காணாமல் போன நாள் மகனோடு தொலைபேசியில் பேசிய போது தான் வேலையாக இருப்பதால் பின்னர் பேசுவதாகக் கூறினார்.

மறுநாள் அக்குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டு மகன் காணாமல் போன விடயத் தைச் சொன்னார்கள். அதன் பின்னர் நான் மகனின் தொலைபேசிக்கு பல தடவைகள் அழைப்பை மேற் கொண்ட போதிலும் தொலைபேசி நிறுத்தப்பட்டிருந்ததாக தந்தை கூறினார்.


இவரது ஜனாஸா நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை நுவரெலியா வைத் தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் புத்தளத் திலிருந்து நுவரெலியா சென்றிருந்த இளைஞனின் உறவினர்களிடம் ஒப் படைக்கப்பட்டது.

சடலத்தை கண்டல்குடா பகுதிக்கு கொண்டு வந்த வுடன் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள்செய்யப்பட்டன.

உயிரிழந்த முஹம்மது அஸ்ஜத்தின் சோக பின்னணியும், விசாரணை அப்டேட்களும்... உயிரிழந்த முஹம்மது அஸ்ஜத்தின் சோக பின்னணியும், விசாரணை அப்டேட்களும்... Reviewed by Madawala News on 10/23/2017 03:22:00 PM Rating: 5