Ad Space avaiable

கழிவுத்தேயிலை விவகாரத்தில் கைதான நபருக்கு சிறைச்சாலையின் அதிகாரி கொடுரமாக தாக்கியதில் வைத்தியசாலையில் அனுமதி.


(எம்.எப்.எம்.பஸிர்)

வாரியபொல சிறைச்சாலையில், விளக்கமறியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை அச்சிறைச்சாலையின் அதிகாரி ஒருவர் கொடுரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வண்ணம் குறித்த அதிகாரி நடந்துகொண்டாரா என்பதை கண்ட றியவும், தாக்குதல் நடத்தப்பட்டதன் நோக்கம், பின்னணியை வெளிப்படுத் தவும் இந்த விசாரணைகள் ஆரம்பிக் கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனிய  தெரிவித்தார்.

 இது தொடர்பில் தாக்குதல் நடத்திய தாக கூறப்படும் சிறை அதிகாரியிடம் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும், மேலும் சில வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்படவுள்ள நிலையில் அந் நடவடிக்கைகளின்
பின்னர், சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் விதிகள் மற்றும் அதிகாரங்களை மீறி குறித்த சிறை அதிகாரி செயற்பட்டிருப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், கழிவுத் தேயிலை விவகாரம் ஒன்று தொடர்பில் பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட் டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை விளக் கமறியலில் வைக்க நிக்கவரட்டிய நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அந்த சந்தேக நபர் வாரிய பொல சிறைச்சாலையில் தடுத்து வைக் கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம், குறித்த சந்தேக நபரை சிறைச்சாலையின் அதி காரியொருவர் அதிகாலை வேளை கொடுரமாக தாக்கியுள்ளார். இதன் போது படுகாயமடைந்த குறித்த சந்தேக நபர், சிறைச்சாலை அதிகாரிகளால் உடனடியாக சிறைச்சாலை வைத்தி யசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்
டுள்ளார்.


எனினும் காயத்தின் தன்மையை பரிசீலித்துள்ள சிறை வைத்திய அதிகாரிகள் உடனடியாக அந்த சந்தேக நபரை குருனாகல் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் அங்கு சந்தேக நபருக்கு விசேட சத்திரசிகிச்சைகளும் செய்யப் பட்டுள்ளன. சிறை அதிகாரியின் தாக் குதல் காரணமாக காயமடைந்த சந்தேக நபருக்கு, வைத்தியரிடம் குளியல றையில் வழுக்கி விழுந்ததாக கூறுமாறு குறித்த அதிகாரியால் அழுத்தம் பிர யோகிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் வைத்தியர்களிடம் குறித்த சந்தேக நபர் நடந்தவற்றை தெரிவித்துள்ள நிலையில் மருத்துவ அறிக்கைகள் ஊடாகவும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத் தப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே இது தொடர்பில் குறித்த சிறை அதிகாரிக்கு எதிராக விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கழிவுத்தேயிலை விவகாரத்தில் கைதான நபருக்கு சிறைச்சாலையின் அதிகாரி கொடுரமாக தாக்கியதில் வைத்தியசாலையில் அனுமதி. கழிவுத்தேயிலை விவகாரத்தில் கைதான நபருக்கு சிறைச்சாலையின் அதிகாரி கொடுரமாக தாக்கியதில் வைத்தியசாலையில் அனுமதி. Reviewed by Madawala News on 10/12/2017 01:52:00 PM Rating: 5