Kidny

Kidny

பண்டாரவளையில் கடைத் தொகுதி தீப்பற்றி எரிந்தது.


பண்டாரவளை நகரிலுள்ள வர்த்தகத் தொகுதியொன்றில், இன்று அதிகாலை திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

பண்டாரவளை தீயணைப்பு பிரிவினர் மற்றும் மின்சார சபை ஊழியர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும், தீயினால் எவருக்கும் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பண்டாரவளையில் கடைத் தொகுதி தீப்பற்றி எரிந்தது. பண்டாரவளையில் கடைத் தொகுதி தீப்பற்றி எரிந்தது. Reviewed by Madawala News on 10/08/2017 10:15:00 AM Rating: 5