Ad Space avaiable

வீடொன்றில் இருந்து இளைஞனின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு. #காத்தான்குடி பொலிஸார் விசாரணை.


மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று (01) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆரையம்பதி 01 ஆம் வட்டாரம் பி.எஸ்.வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் குறித்த வீட்டில் இருந்த மா.ரகுவரன் (34வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ள நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அவதானித்த பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் வீட்டில் அழுகிய நிலையில் சடலத்தினை மீட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வீடொன்றில் இருந்து இளைஞனின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு. #காத்தான்குடி பொலிஸார் விசாரணை. வீடொன்றில் இருந்து இளைஞனின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு.  #காத்தான்குடி பொலிஸார் விசாரணை. Reviewed by Madawala News on 10/02/2017 09:05:00 AM Rating: 5