பலப்பிட்டிய நீதிமன்றத்துக்கு இன்று சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக்கும்பல் ஒன்றின் உறுப்பினர்கள் இன்று வழக்கு விசாரணைக்காக பலப்பிட்டிய நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டமையால் அங்கு எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறாத வகையில் பலப்பிட்டிய நீதிமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

சிறப்பு அதிரடிப்படையினருடன், ஆயுதமேந்திய பொலிஸாரும் நீதிமன்றத்தை சுற்றிலும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டதுடன், நீதிமன்றத்தை அண்மித்த பிரதேசங்களில் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

கைதிகளை அழைத்து வந்த சிறைச்சாலை பேருந்து வண்டிக்கும் சிறப்பு வழித்துணைப் பாதுகாப்பு வழங்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.