Ad Space avaiable

ஞானசார தேரரை மியன்மார் வருமாறு அசின் விராது தேரர் அழைப்பு



பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மியன்மார் நாட்டுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மியன்மார் நாட்டின் 969 இனவாத அமைப்பின் தலைவர் அசின் விராது தேரர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

சிறுபான்மை ரோஹிங்கிய முஸ்லிம் மக்களுக்கு எதிரான மியன்மார் அரசாங்கத்தின் இனப்படுகொலை நடவடிக்கைகள் காரணமாக அந்நாடு சர்வதேசத்தில் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

அவ்வாறான நிலையில் சர்வதேச பௌத்தர்களின் ஆதரவை மியன்மாருக்கு ஆதரவாகத் திரட்டியெடுக்கும் நடவடிக்கையொன்றை சர்ச்சைக்குரிய விராது தேரர் ஆரம்பித்துள்ளார்.

அதன் ஒருகட்டமாகவே ஞானசார தேரருக்கும் மியன்மார் வருவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞானசார தேரரை மியன்மார் வருமாறு அசின் விராது தேரர் அழைப்பு ஞானசார தேரரை மியன்மார் வருமாறு அசின் விராது தேரர் அழைப்பு Reviewed by Madawala News on 10/01/2017 06:44:00 AM Rating: 5