Ad Space avaiable

ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு முகங்கொடுக்கவே வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதித்தோம்


வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடையை விதிக்காவிட்டால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் எதிர் விளைவுக்களுக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்படுமென வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்


ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமையவே இலங்கையும் வடகொரியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடையைக் கொண்டுவருவதாகவும் அவர் கூறினார்.


வடகொரியாவுக்கு எதிராக இலங்கை பொருளாதாரத் தடை விதித்திருக்கும் விடயம் தொடர்பில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்ததுடன், ஏன் இவ்வாறான தடை கொண்டுவரப்பட்டது என்பதை அரசு விளக்கமளிக்கவேண்டும் என்றும் கோரினார்.


இதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, .நா பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய இப்பொருளாதார தடை கொண்டுவரப்படுவதாகவும், இதனை மீறிச் செயற்பட முடியாது என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் வடகொரியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கும் பிரேரணையொன்று உள்ளது. இந்தப் பிரேரணைக்கிணங்க வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடையை விதிக்குமாறு எமது நாட்டிடமும் கோரப்பட்டுள்ளது.


இதனை நிறைவேற்றாமல் நாம் காலங்கடத்திவந்தோம். இது நீண்டகாலமாக இழுபட்டுவரும் பிரச்சினையாகும்.


ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு மதிப்பளித்து செயற்படுவோம் என்ற சட்டமொன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இதனை மீறிச் செயற்படும் அதிகாரம் எமக்கு இல்லை. இதில் நாம் தவறிழைக்கவும் முடியாது.


பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தையும், .நா பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் மீற முடியாது. நீண்டகாலத்துக்கு முதல் நிறைவேற்றப்பட்ட இதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க முடியாது என்றார்.


இதன் பின்னர் குறுக்கிட்ட ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, வடகொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் யாவை? பொருளாதாரத் தடைவிதிப்பதாயின் எவ்வாறான பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது உள்ளிட்ட பல விடயங்களை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். இதனை அரசு அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.


எனினும், வெ ளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பண இதற்கு எந்தவித பதிலையும் வழங்கியிருக்கவில்லை. ஆனால் குறுக்கிட்ட சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, இது விடயம் தொடர்பில் பாராளுமன்ற விவாதமொன்றை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறினார்.


ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 

ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு முகங்கொடுக்கவே வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதித்தோம்  ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு முகங்கொடுக்கவே வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதித்தோம் Reviewed by Madawala News on 10/10/2017 08:06:00 AM Rating: 5