Kidny

Kidny

முன்னாள் ஹோமாகம நீதவான் நடக்காத விடயங்களையும் நடந்ததாக சாட்சியம் அளித்துள்ளார்..















இந்த அரக்கர்களின் அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் எதையும் செய்ய முடியாது.இந்த நாட்டில் வெள்ளைக்காரான் உருவாக்கிய சட்டத்திற்கு  எம்மால் கட்டுப்பட முடியாது என தான் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் கூறியதாக ஒப்புக்கொள்வதாக பொது பாலா சேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நேற்று (16) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

தான் உணர்ச்சிவசப்பட்டு இத்தகைய ஒரு கருத்தை வெளியிட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த வருடம் ஹோமாக நீதி மன்றத்தில் ஊடகவியளாலர் பிரகீத் எக்னெலிகொட வழக்கு விசாரணையின் போது நீதி மன்றத்திற்குள் புகுந்த ஞானசார தேரர் குறித்த வழக்கின் சட்சியை அச்சுருத்தியதுடன் நீதிபதியிடம் தனது விமர்சனத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

குறித்த விவகாரம் தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கபடும் விசாரணைகளில் சாட்சியம் நேற்று ஞானசார தேரர் சாட்சியம் அளித்தார்.

குறித்த வழக்கில் தனக்கு எதிராக சாட்சியம் அளித்த ஹோமாக நீதிமன்ற நீதவான் விடயத்தை திரிபுபடுத்தி சாட்சியம் அளித்துள்ளாக குறிப்பிட்டுள்ள ஞானசார தேரர் தான் கருத்து வெளியிடும் போது அவர் அதனை நிறுத்துமாறு கூறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஹோமாகம நீதவான் நடக்காத விடயங்களையும் நடந்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.. முன்னாள் ஹோமாகம நீதவான் நடக்காத விடயங்களையும் நடந்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.. Reviewed by Madawala News on 10/17/2017 09:35:00 AM Rating: 5