Kidny

Kidny

மௌலவி ஆசிரியர் நியமன விடயத்தில் மிகப்பெரிய அநீதி


மௌலவி ஆசிரியர் நியமன விடயத்தில் இந்த அரசாங்கத்தின் கல்வி அமைச்சு மிகப்பெரிய  அநீதியை
மௌலவிமாருக்கு செய்துள்ளது என்பதால் இது விடயத்தில் கௌரவ ஜனாதிபதி தலையிட வேண்டும்  என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.

இது பற்றி இன்று அவசரமாக கூடிய கட்சியின் உயர் சபைக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது,

1992ம் ஆண்டுக்குப்பின் மௌலவி ஆசிரிய நியமனம் வழங்கப்படாததால் 2005ம் ஆண்டு உருவான உலமா கட்சி அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு மௌலவி ஆசிரிய நியமனத்தை முக்கிய நிபந்தனையாக முன் வைத்தது. அதனை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்

ஆனாலும் உடனடியாக நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதால்  உலமா கட்சியின் தொடரான போராட்டம் காரணமாக 2006ம் ஆண்டு கல்வி அமைச்சால் ஆளணி வெற்றிட தரவுகள் பெறப்பட்டன

அதன்படி 635 மௌலவி ஆசரியர்களுக்கான வெற்றிடம் இருப்பதாக அப்போது கூறப்பட்டது. அதன் பின் கிழக்கு மாகாண சபை தேர்தலை நாம் பயன் படுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்ததன் காரணமாக 450 பேருக்கு மௌலவி ஆசிரிய நியமனம் வழங்கப்படுவதற்காக 2008ம் ஆண்டு வர்த்தமாணி அறிவித்தல் வெளியாகியது

ஆனாலும் நியமனம் வழங்காமை காரணமாக உலமா கட்சி மீண்டும் போராட்டத்தில் குதித்தது. இந்த போராட்டத்தில் சில முஸ்லிம் அமைப்புக்களும் எமக்கு உதவின. மீண்டும் 2010 பொதுத்தேர்தலை முன் வைத்து நாம் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசியதன் பயனாக சுமார் மூவாயிரம் பேர் கலந்து கொண்ட போட்டிப்பரீட்சையில் 150 பேருக்கு மட்டும் நியமனங்கள் வழங்கப்பட்டன. இதற்கு காரணம் போட்டிப்பரீட்சை எவ்வாறு இருக்க வெண்டும் என்ற உலமா கட்சியின் ஆலோசனைகளை அப்போதைய கல்வி அமைச்சு கருத்திற்கொள்ளாமையாகும்.

அதன் பின் மௌலவி ஆசிரியர் நியமனத்துக்கான எமது போராட்டத்துக்கு மௌலவிமாரும், முஸ்லிம் சமூகமும் ஆதரவு தராமை காரணமாக 2010க்கு பின் இந்நியமனம் வழங்கப்படவே- யில்லை. ஆனாலும் இது பற்றி அவ்வப்போது நாம் அரசுக்கு நினைவூட்ட தவறவில்லை.

தற்போது கிழக்கு மாகாணம் போன்ற சில மாகாணங்கள் வெற்றிடம் பற்றி அறியத்தராமை காரணமாக கிழக்கு மாகாண மௌலவிமாருக்கான நியமனம் மறுக்கப்பட்டுள்ளமை மிகப்பெரிய அநியாயமாகும். இது பற்றி கவனமெடுக்கும்படி நாம் அடிக்கடி முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தும் அசிரத்தையாக இருந்து விட்டனர்

அதே போல் இதற்கான முயற்சியில் எம்மோடு இணைந்து செயற்பட மௌலவிமார்களை அழைத்த போது அவர்களும் அலட்சியமாக இருந்ததன் காரணமாக இந்த அநியாயத்துக்கான பொறுப்பை கிழக்கு மாகாண சபையும், கிழக்கு மௌலவிமாரும் பொறுப்பேற்க வேண்டும்.

இதே வேளை 2016ம் ஆண்டு கல்வி அமைச்சால் கோரப்பட்ட ஆளணி வெற்றிட கோரிக்கையில் அநீதி இருந்தமை காரணமாகவே தாம் தரவுகளை வழங்கவில்லை என எம். ரி. . நிஸாம் குறிப்பிட்டுள்ளமை அவரது அலட்சிய போக்கை காட்டுகிறது. அவ்வாறு இருந்தால் இது விடயத்தில் முதல் வரை தெரிந்திருக்கும் உலமா கட்சியை அழைத்து இதனை அரசியல் மயப்படுத்தும்படி கூறியிருந்தால் இதற்கான முயற்சியை நாம் செய்திருப்போம்.

ஆக மொத்தத்தில் இந்த அரசாங்கத்தின் கல்வி அமைச்சு இது விடயத்தில் மிகப்பெரிய அநியாயத்தை செய்துள்ளதால் இது விடயத்தில் ஜனாதிபதி மைத்திரி அவர்கள் தலையிட்டு அனைத்து மாகாணங்களிலும் உள்ள மௌலவி ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலமா கட்சி கோருகிறது என முபாறக் மௌலவி குறிப்பிட்டார்.  
மௌலவி ஆசிரியர் நியமன விடயத்தில் மிகப்பெரிய அநீதி  மௌலவி ஆசிரியர் நியமன விடயத்தில் மிகப்பெரிய அநீதி Reviewed by Madawala News on 10/19/2017 04:43:00 PM Rating: 5