Kidny

Kidny

உள்ளுராட்சி மன்ற சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்


பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை திருத்தப்பட்ட சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

அதே நேரம் மாகாண    சபை தேர்தல் திருத்த சட்டமூலம் நாடாளுமன்ற நிலையியல் சட்டங்களுக்கு அமைவாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். 

மாகாண சபை தேர்தல் வாக்கெடுப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் செயற்பாடு தொடர்பில் மக்கள் மத்தியில் போலியான கருத்து நிலவி வருவதாக அவர் குறிப்பிட்டார். 

இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளித்த போதே சபாநாயகர் இந்த விடயங்களை தெரிவித்தார். 

முற்றுபெறாத திருத்த சட்டமூலத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு குறிப்பிடத்தக்க கால அவகாசம் தேவைப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்
உள்ளுராட்சி மன்ற சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்  உள்ளுராட்சி மன்ற சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம் Reviewed by Madawala News on 10/09/2017 04:15:00 PM Rating: 5