Kidny

Kidny

எதிர்காலத்தை இழக்கும் சிறுவர்கள்

எம்.எம்..ஸமட் 
சமூக மட்டத்தில் பல சமூக நோய்கள் பரந்து காணப்படுகின்றன. இவை தீர்க்கப்பட முடியதாக சமூகப்
பிரச்சினைகளாகவும் மாறியிருக்கிறது. இத்தகைய சமூக நோய்களில் சிறுவர் துஷ்பிரயோகம் என்பது தடுக்க முடியாத சமூக நோயாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.

மதங்கள் போதிக்கும் ஒழுக்க நெறிகளையும், சமூக விழுமியங்களையும் பின்பற்றும் மக்கள் வாழும் இந்நாட்டில் சகல மத வழிபாட்டுத்தளங்களிலும், பாடசாலைகளிலும், உளவள ஆலோசனை நிலையங்களிலும் குற்றச் செயல்கள் புரியாது வாழ்வதற்கும்,; குற்றங்கள் புரிந்திருந்தால் அல்லது புரிந்து கொண்டிருந்தால் அவற்றிலிருந்து  மீண்டு நல்வாழ்வுக்குள் நுழைவதற்குகான போதனைகள்; இடம்பெறுகின்றன.

குற்றம் புரிவதற்கான எதிர்மறை எண்ணங்கள் உருவாகமல் நேர்மறை எண்ணங்களோடு எவ்வாறு பரிசுத்தமாக வாழ்வது என்ற வழிகாட்டல் ஆலோசனைகள் ஆன்மீக வழிகாட்டிகளினாலும், ஆசிரியர்களினாலும், உள ஆற்றுப்படுத்துனர்களினாலும், பெற்றோர்களினாலும் கூட அவரவர்களுக்குரிய நிலைகளிலிருந்து வழங்கப்படுகின்றன. ஆனால், வேலிகளாக இருந்து இவ்வாறு வழிகாட்டுகின்றவர்களில் சிலர், மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு குற்றச் செயல்களில்; ஈடுபடுகின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்களின் இழிசெயல்களினால் அப்பாவிச் சிறுவர்களும், பெண்களும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர் குறிப்பாக பாலகர்கள் மற்றும் சிறுவர்கள் மீது புரியப்படும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவவதானது வளரும் சிறார்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது என்பது வெளிப்படை

மதகுருமாரினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சிறுவர், சிறுமிகள், ஆரியர்கள். அதிபர்களினால் பலாத்காரங்களுக்கு உள்ளாகும் மாணவர்கள், வைத்தியரினால் பாலியல் இம்சைக்குக்கு உள்ளாகும் நோயாளிச் சிறுவர்கள், தந்தையினால் வன்புணர்வுக்கு ஆளாகும் மகள், அண்ணனினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் தங்கை, மாமாவினால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் மருமகள், தாத்தாவினால் பாலியல் சிம்சைக்கு உட்படும் பேரன் பேத்திகள் என்ற செய்திகள் நாளாந்தம் ஊடகங்களில் வெளிவருகின்றன.

பாதுகாப்பு வேலிகளாக இருக்க வேண்டியவர்களினால் பயிர்களான பாலகர்களும், சிறுவர்களும் இவ்வாறு துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகும் சம்பவங்கள் நடைபெறுவதானது உலகம் அறியாமைக் காலத்தை நோக்கி நகர்கிறதா என எண்ணத் தோன்றுகிறது. இத்துஷ்பிரயோகங்களில்  பெற்ற தந்தையினால் வன்கொடுமைக்கு ஆளாகும் பிள்ளைகள் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது. கடந்த வார இறுதியில் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி பெற்ற தந்தையினால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ள சம்பவத்தை இதற்கோர் அண்மைய உதராணமாகச் சுட்டிக்காட்டலாம்

இவ்வாறு பெற்ற தந்தையினால் மாத்திரமின்றி  சமூகத்தால் மதிக்கப்படுகின்றவர்களில் ஒரு சிலரினால் புரியப்படும் இத்தகைய பாலியல் கொடுமைகள் அவர்கள் சார்ந்த ஏனையவர்களுக்கு தலைக்குனிமை ஏற்படுத்துகிறது. இவ்வாறான சம்பவங்கள் அண்மைகாலமாக அதிகளவில் இடம் பெற்று வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதோடு மிகவும் கவலையளிக்கக் கூடியதாகவுமுள்ளது. இத்தகையவர்களுக்;கெதிராக எவ்வித தயவு தாட்சணையுமின்றி உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அவசியம் என்பதையும் வலியுறுத்த வேண்டியுள்ளது.

துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வழிமுறைகளும், சட்டதிட்டங்களும,; தண்டனைகளும் உருவாக்கப்பட்டுள்ளபோதிலும், அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றபோதிலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தினமும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்றால் இதற்கான காரணத்தை ஒவ்வொரு பெற்றோரும் பொறுப்புள்ள பாதுகாவலரும், சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், மனித நேயமுள்ள ஒவ்வொருவரும் அறிந்துகொள்வது மாத்திரமின்றி, அவற்றை தடுப்பதற்கான உரிய விழிப்புணர்வுகளைப் பெற்றுக்கொண்;டு; அதற்கேற்ப செயற்படுவதும்; இன்றியமையாததாகும்

சிறுவர் துஷ்பிரயோகமும் அறியப்பட வேண்டிய காரணங்களும்.

சிறுவர் துஷ்பிரயோகம் பல்வேறு காரணங்களினால் இடம்பெறுகின்றன. பாலியல் ரீதியாக சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குகின்றவர்கள் ஏதோவொரு வகை பாலியல் உளக்கோளாரினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். உளக்கோளாறுகளுடன் நவீன தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியின் விளைவாக உருவாக்கப்பட்டுள்ள அதிகளவிலான வேண்டத்தகாத இணையத்தளப்பாவனையும்;, அநாகரியமிக்க, கவர்ச்சிகரமான ஆடையணிதலும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் இடம்பெறுவதற்கான முக்கிய காராணங்களாக அமைவதாகக் கருதப்படுகின்றன.

அத்தோடு, உடல், உள, உணர்ச்சி மற்றும் புறக்கணிப்பு ரீதியான சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு சமூகங்களின் பொறுபற்ற தன்மை, சூழல் நெருக்கீடுகள், குடும்ப நெருக்கீடுகள் என்பன காரணமாக உள்ளன. பொருளாதாரச் சிக்கல்கள், வயதில் மிக நெருக்கமாகவுள்ள பிள்ளைகள், தனியான பெற்றோரின் பராமரிப்பு, திருமணப் பிரச்சினைகள், ஒரு சில ஆதரவுகளுடன் சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நிலை, ஊடகங்களின் தாக்கம் போன்ற குடும்ப, சமூக சூழல் காரணிகளும் தீராத ஆரோக்கிய பிரச்சினைகள், மது மற்றும் போதைவஸ்த்துப் பாவனை, கோபத்தை அடக்க முடியாத தாழ்வான சுய மதிப்புடைய வயது, கல்வி மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் ஆகியவற்றுக்கு உட்படும் தரக்குறைவான திறன்கள், சிறுவர்களின் விருத்தி தொடர்பாக யதார்த்தமற்ற எதிர்ப்பார்ப்புகள் போன்றவற்றைக் கொண்ட பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் நடத்தைகளும் சிறுவர் துஷ்பிரயோம் ஏற்படுவதற்குரிய காரணங்களாக விளங்குகின்றன.

இத்தகைய காரணங்களினால் அல்லது இவை தவிர்ந்த ஏனைய காரணங்களினால் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகுவதைத் தடுக்க வேண்டுமாயின். இத்தடுப்பு நடவடிக்கைப் பணிகள் சமூகப் பணியாக கருதப்பட்டு சமூகத்திலுள்ள ஒவ்வொரு பிரஜையும் இவை தொடர்பில் விழிப்புணர்வு பெறுவதுடன் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதை தமது பொறுப்பாகவும் உணர வேண்டும். அப்போதுதான் இத்தகைய கயவர்களிடமிருந்து பிள்ளைகளைக் காப்பாற்ற முடியும். சிறுவர்களின் எதிர்காலம் இழந்துவிடாமல் பாதுகாக்கப்படும்.

சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவன அதிகாரிகளும், செயற்பாட்டாளர்களும் சமூகத்தின் ஒவ்வொரு பிரஜையையும் சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது. இதற்கான காரணமென்ன, துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் எப்படிப்பட்டவர்கள். எத்தகையவர்களால் துஷ்பிரயோகம் ஏற்படுகிறது. துஷ்பிரயோகச் செயற்பாடுகளிலிருந்து சிறுவர்களை எவ்வாறு பாதுகாக்கலாம் அதற்கான முறையான பொறிமுறைகள் எவை போன்ற பூரண அறிவை பெறுவதும் அவசியமாகும்.

இவை குறித்த முறையான விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகளை முறையாகவும் தொடர்ச்சியாகவும் திட்டமிட்ட அடிப்படையிலும் ; பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கிராமம் மற்றும் நகரம் தோரும் முன்னெடுக்கப்படுவது முக்கியமாகும்.

சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய அறிவு அவற்றைத் தடுப்பதற்காகச் செயற்படுகின்றவர்களுக்கு மாத்திரமின்றி ஒவ்வொரு தனிநபருக்கும் அவசியமாகவுள்ளது. சிறுவர்கள் என்றால் யார்? அவர்களின் உரிமை என்ன? சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் என்ன? துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கான காரணங்கள் எவை? துஷ்பிரயோகங்களிலிருந்து  எவ்வாறு சிறுவர்களைப் பாதுகாக்க முடியும். போன்ற அறிவுடன் கூடியதான விழிப்புணர்வு இன்று ஒவ்வொரு தனி நபருக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.

ஏனெனில,; இன்று நமக்கு சொந்தமில்லாத ஒரு சிறுவனோ, சிறுமியோ துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட செய்தி நாளை நமது சொந்த உறவான பிள்ளை துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட செய்தியாகக் கூட வரலாம். அந்த நிலையிலிருந்து நமது சிறார்களி;ன் எதிர்காலம் காப்பாற்ற வேண்டுமாயின் ஒவ்வொரு தனிநபரும் இவ்விடயம் தொடர்பில் விழிப்படைவது அவசியமாகும்.

18 வயதிற்கு குறைந்த சகரும் சிறுவர்களாகக் கருதப்படுவர். சிறுவர்களைப் பாதுகாப்பதற்காகவும் சிறுவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் பட்டயம் உருவாக்கப்பட்டு, அது 1989ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதுடன் 1991ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினாலும் அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களது அடிப்படை உரிமைகள் தொடர்பில் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தையும் அதன் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கொள்கைகள், விதிகளையும் அறிந்து கொள்வதும் அவசியமாகும்.

சிறுவர்களுக்கான உரிமைகளும் துஷ்பிரயோக வடிவங்களும்

பிறப்பின் போது பெயரொன்றையும் இன அடையாளத்தையும்  பெற்றுக்கொள்ளும் உரிமை, பெற்றோரைத் தெரிந்து கொள்வதற்கும் அவர்களது பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை, பெற்றோரிடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்தாதிருப்பதற்கான உரிமை, வாழ்வதற்கும் முன்னேறுவதற்குமான உரிமை, தமது கருத்தை வெளிப்படுத்தும் உரிமை, சிந்திப்பதற்கும் மனச்சாட்சிப்படி நடப்பதற்கும், சமயமொன்றைப் பின்பற்றுவதற்குமான உரிமை, போதிய கல்வி பெறும் உரிமை, சமூக உரிமை, தனியுரிமை, சுகாதார வசதிகள் பெறும் உரிமை, ஓய்வெடுக்கவும் விளையாடவும் உரிமை, சித்திரவதை குரூரமான தண்டனைகளிலிருந்து  தவிர்ந்து கொள்ளும் உரிமை, சாதாரண வழக்கு விசாரணைகளுக்குள்ள உரிமை, சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்குமான உரிமை போன்ற பல்வேறு உரிமைகளை அனுபவிக்கும் உரிமை சிறுவர்களுக்குண்டு. இத்தகைய உரிமைகள் மறுக்கப்படுவதும் துஷ்பிரயோகமாகவே கருதப்படுகிறது.

பொதுவாக சிறுவர் துஷ்பிரயோகமானது பல்வேறு வடிவங்களில் அரங்கேற்றப்படுகின்றன. உடலியல் ரீதியான துஷ்பிரயோகம், உளவியல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் ரீதியான துஷ்பிரயோகம், உணர்வு ரீதியான துஷ்பிரயோகம், புறக்கணிப்பு ரீதியிலான துஷ்பிரயோகம் என பல்வேறு கோணங்களில் சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

சிறுவர்களுக்கு உடல் ரீதியாக தீங்கு இழைக்கப்படின் அது உடலியல் ரீதியான துஷ்பிரயோகமாகக் கருதப்படுகிறது. இதில் அடித்தல், காயப்படுத்தல், அங்கங்களைச் சிதைத்தல் போன்ற மட்டுப்படுத்தப்படாத தண்டனைகளும் அடங்குகின்றன. குறிப்பாக பெரும்பாலான உடலியல் ரீதியிலான துஷ்பிரயோகங்கள் வீடுகளில் இடம்பெறுகின்றன. பெற்றோர்கள், பாதுகாவலர்கள், வயது வந்த சகோதாரர்கள், சில ஆசிரியர்கள், கள்ளக் காதாலர்கள், காதலிகள், எஜமானர்கள் போன்றோரினால் சிறுவர்கள் உடலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இவ்வாறான உடலியல் ரீதியான சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் ஒரு சில வெளிக் கொணரப்படுகின்றபோதிலும் பல சம்பவங்கள் வெளிக்கொணரப்படாமல் மூடிமறைக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலை ஒழுங்கு விதிகளையும் விழுமியத்தையும் மீறிச் செயற்படுகின்றபோது அவற்றிற்கெதிராக ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு சில நடவடிக்கைகள் சிறுவர் துஷ்பிரயோகமாகக் கருதப்பட்டு அவை ஆசிரியர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதனால் பாடசாலை மாணவர்கள் புரிகின்ற குற்றங்கள் தொடர்பில் ஆசிரியர்கள் அதிக அக்கறை கொள்ளாதிருந்து விடுகின்றனர் இத்தகைய செயற்பாடு அல்லது சிறுவர்களான மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அவர்களை நேர்வழிப்படுத்துவதிலிருந்தும் தடுத்துவிடுகிறதா என்ற கேள்வியும் எழாமலில்லை.

பொதுவாக, சிறுவர்கள் சுயமாக விளையாடுதல், கற்றல், நாளாந்த கருமங்களைச் செய்தல், ஒளிவு மறைவின்றிப் பேசுதல், விருப்பங்களை வெளிப்படுத்துதல், அறியாத விடயங்களை அறிந்துகொள்ள முயலுதல், சுயமாகச் சிந்தித்தல், ஆராய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற போது அவை பலவந்தமாகத் தடுக்கப்படுமிடத்து, உளவியால் ரீதியான தாக்கங்களுக்கு உள்ளாகுவார்கள்.

இதனால் அவர்களின் ஆற்றல், ஆளுமை, திறன், நுண்ணறிவு, விவேகம் போன்ற உள நிலைகள் பாதிப்படையும். இவ்வாறு சிறுவர்களைப் பாதிப்படை செய்யும் செயற்பாடுகள் உளவியல் ரீதியான துஷ்பிரயோகமாகக் கொள்ளப்படுகிறது. இத்தகைய துஷ்பிரயோக நடவடிக்கைகள்; வீடுகளில் பெற்றோர்களினாலும் வயது வந்தவர்களினாலும் நிறையவே நடைபெறுகின்றன. அநேக வீடுகளில் பிள்ளைகளின் சுதந்திரங்கள் பறிக்கப்படும் வகையில் தங்களது எண்ணங்களையும் ஆசைகளையும் பெற்றோர்கள் பிள்ளைகள் மீது திணிக்கின்றனர். இதனால், சிறுவயதில் ஏற்படுகின்ற உளத் தாக்கங்கள் அப்பிள்ளையின் எதிர்காலத்தைப் இழக்கச் செய்யும் என்பதை அநேக பெற்றோர்கள் மறந்து செயற்கின்றனர். இத்தகைய நடவடிக்கைகள் சிறுவர் துஷ்பிரயோகமாகக் அநேகரினால் கருதப்படுவதில்லை. இதற்கு அவர்களின் அறியாவை அல்லது சிறுவர் துஷ்பிரயோகம் குறித்தான முழுமையான விழிப்புணர்வுக்கு அவர்கள் உட்படுத்தப்படாமை காரணமாக இருக்கலாம்

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்காக பிள்ளைகளைத் தயார்படுத்தும்; போது  பெற்றோர்களால் பிள்ளைகள் மன அழுத்திற்கு உள்ளாகின்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளமையை இங்கு சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும். அண்மையில் இப்பரீட்சையின் பெறுபேறு வெளியான பின்னரான நாட்களில் நிகழ்ந்தாக வெளிவந்த சமபவங்கள் மனங்களை உருக்கியது. பெற்றோரின் நெருக்கீடு தாங்க முடியாத மாணவர் ஒருவர் நுவரெலியப் பிரதேசத்தில் கிணற்றிற்குள் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் இதற்கோர் உதாரணமாகும்.

சிறுவர்களை ஏதாவது பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுத்தும் போது சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுகின்றனர். பாலியல் துஷ்பிரயோகம் என்பது பாலியல் இச்சைக்காக சிறுவர்களைப் பயன்படுத்துவது மாத்திரமின்றி, சிறுவர்களைத் தொடுதல், வருடுதல், பொருத்தமற்ற பாலியல் சொற்களைப் பயன்படுத்துதல், பாலியல் நொந்தரவுகளைக் கொடுத்தல், பாலியல்  செயற்பாடுகளை பார்ப்பதில் ஈடுபடுத்தல், ஆபாசப் படங்கள், புத்தகங்களை பார்க்கச் செய்தல் போன்ற செயற்பாடுகளில் சிறுவர்களை ஈடுபடச் செய்வதானது பாலியல் ரீதியான சிறுவர் துஷ்பிரயோகமாகக் கொள்ளப்படுகிறது.

சமகாலத்தில் சிறுவர்கள் மிக மோசமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுட்டுள்ளவர்கள் 'சேடிசம';, 'பிடோபீலியா', 'பெடிசிஷம';, 'மஸோசியம்,' போன்ற பாலியல் விலகல் நடத்தை உளக் கோளாறுகளினால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என உளவியல் நுபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோமென்பது வெளிப்படையாகவே மறுத்து விலக்குதல், தனிமைப்படுத்தல், அவமானப்படுத்தல், பயமுறுத்தல், கெடுத்தல், சுரண்டிப்பிழைத்தல், உணர்ச்சி ரீதியான துலங்களை மறுத்தல் மற்றும் சூழலுடன் இடைத்தொடர்பை மேற்கொள்ளும் சிறுவர்களது பிரயத்தனங்களுக்கு தண்டணையளித்தல் போன்ற செயற்பாடுகள் உணர்ச்சி ரீதியிலான சிறுவர் துஷ்பிரயோகமாகக் கொள்ளப்படுகிறது. இவ்வகையான துஷ்பிரயோகச் செயற்பாடுகளும் பெருவாரியாக இடம்பெற்றுத்தான் வருகின்றன.

ஒரு சிறுவனுக்குரிய உடை, உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, மருத்துவம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படுகின்றபோது அச்சிறுவன் புறக்கணிப்பு ரீயிலான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றான். அதுதவிர, சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவதும் அதனால் ஏற்படுகின்ற இறுக்கமான செயற்பாடுகளும கூட சிறுவர் துஷ்பிரயோக வடிவங்களாகக் கருதப்படுகின்றன.

துஷ்பிரயோகம் பற்றிய உண்மையான தகவல்களை சிறுவர்களுக்கு கற்பித்தல் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகத்தினால் இலகுவில் பாதிக்கப்படும் தன்மையைக் குறைப்பதற்கும் ஆரோக்கியமான உறவுகளை மேம்படுத்துவதற்கும் தேவையான திறன்களையும் பண்புகளையும் அவர்களில் விருத்தி செய்தல் அவசியம். இந்த அவசிய நடவடிக்கைகளில் பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களின் வகிபங்கு அளப் பெரியது.

துஷ்பிரயோகத்தடுப்பும்  வினைத்திறன்மிக்க விழிப்புணர்வுகளும்

18 வயதிற்குக் குறைந்தவர்களே சிறுவர்களாக் கருதப்படுகிறார்கள். இவ்வயதுச் சிறுவர்களே பாடசாலை மாணவர்களாகவும் உள்ளனர். கல்வி அமைச்சின் 2016ஆம் ஆண்டின் தரவுகளின் பிரகாரம் நாடு பூராகவுமுள்ள 10,162 ஆயிரம் பாடசாலைகளில் 4,143,330; மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக 234,555 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஆசிரியர்கள் என்பவர்களின் பணி மாணவர்களின் பரீட்சை அடைவு மட்டங்களை அதிகரிப்பதற்கான கற்பித்தலாக மாத்திரமின்றிமாணவர்களின் பாதுகாப்பு உட்பட ஏனைய விடயங்களிலும் கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும்.

கல்வித்துறை வியாபாரமாக்கப்பட்டதன் விளைவாக ஒரு சில ஆசிரியர்கள் பண மையக் கல்விக்கு அடிமைப்பட்டுள்ளனர். இதனால், பாடசாலைகளில் கற்பித்தல் என்ற பணி பாடசாலைக்கு அப்பால் முறையாக இடம்பெறுகிறது. இவ்வாறு கற்பித்தல் பணி இடம்பெறும் ஒரிரு தனியார் வகுப்புக்களில் இவ்வாறான துஷ்பிரயோகச்சம்பங்கள் நிகழ்கின்றன. தமது பிள்ளைகளின்; எதிர்காலம் ஒளிமயமாக வேண்டும் என்பதற்காக தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் ஏனைய வதி விட கல்வி நிலையங்களுக்கும் அனுப்பப்படும் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இத்தகைய ஆசிரியர்களுக்குண்டு. ஆனால், வேலியாக இருக்க வேண்டிய இத்தகைய ஓரிரு ஆசிரியர்களினாலும் பாடசாலை அதிபர்களினாலும் கூட மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றமை பெரும் கொடுமையாகும். சமகாலத்தில் இவ்வாறு மாணவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுவது அதிகரித்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின்  சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்தான முறைப்பாகுகளுக்கான புள்ளி விபரங்களின் பிரகாரம்,  2015ல் 10,315 சம்பவங்களும் 2016ல் 10,732 சம்பவங்களும் 2017ஆம் ஆண்டின் ஜுலை மாதம் வரையான காப்பகுதியில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கையானது 3,785ஆக பதிவாகியுள்ளது. இவற்றில் அதிகளவிலான சம்பவங்கள் கொழும்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 569 சம்பவங்களும் கம்பஹா, குருநாகல், காலி; மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் முறையே 420, 283, 259, 214 எனக் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. இச்சம்பவங்களில் சிறுவர்கள் மீதான சித்திரவதை, கல்வி உரிமை மறுத்தல், பாலியல் வன்கொடுமை, பாலியல் தொல்லை போன்ற துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டுகிறது.

சிறுவர்கள் என்பவர்கள் பாடசாலை மாணவர்கள் எனக் கருதி, அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், சிறுவர் துஷ்பிரயோகச் செயற்பாடுகளிலிருந்து மாணவர்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகளும், விழிப்புணர்வும் பாடசாலைகளில் முறையாகவும,; தொடராகவும் வழங்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும். அத்துடன், சிறுவர்கள் துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமாயின்,; விழிப்புணர்வு செயற்பாடுகள் ஆரோக்கியமிக்க பொறிமுறைகளினூடாக தகைமையுள்ளவர்களைக்  கொண்டு முன்னெடுக்கப்படுவது அவசியமாகும்

அமைச்சுக்களினாலும், நிறுவனங்களினாலும் உளவள ஆலோசகர்களுக்கான நியமனத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றபோது வெறும் பட்டச் சான்றிதழ்களை மாத்திரம் கருத்திற்கொள்ளாது பட்டம் உள்ளவர்களை மாத்திரம் இணைத்துக்கொள்ளாது, இத்துறையில் கூடிய அனுபவமும், பரந்த அறிவும், மக்களை இலகுவில் கவரக் கூடிய விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்கும் தொழில்சார் திறனும் கொண்டவர்களும் இந்நியமனங்களின்போது இணைத்துக்கொள்ளப்படுவது சிறுவர் துஷ்பிரயோகத் தடுப்புத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க வழிவகுக்கும்.

ஏனெனில், சில பாடசாலைகளிலும், பிரதேச செயலகங்கள் ஊடாகவும்; முன்னெடுக்கப்படுகின்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் வினைத்திறனற்றதாகக் காணப்படுவதற்கு உளவள ஆலோசனைத்துறையில் அனுபமற்றவர்களின் பட்டச் சான்றிதழ்கள் மாத்திரம் கருத்திற்கொள்ளப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை காரணமென சுட்டிக்காட்டப்படுவதை நிகாரிக்க முடியாது.

காமுவர்களினதும் ஏனைய வன்னெண்ணம் கொண்டவர்களினதும் பாலியல் பசிக்குப் பலியாக்கப்படும் பாலகர்களும் சிறுவர்களும்; தங்களது வளமான எதிர்காலத்தை இழந்து எதிர்காலத்தில் அவர்களும் ஏனைய சிறார்களின் எதிர்காலத்தை இழகச் செய்யும் செயற்பாடுகளில் இறங்கிச் செயற்படுவதை அன்றாடம் கேள்வியுறக் கூடியதாகவுள்ளதுஇவ்வாறு அப்பாவிச் சிறுவர்களின எதிர்காலம் திசை மாற்றப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டுமாயின், சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் வெற்றியளிக்கக் கூடிய பொறிமுறையினூடாக ஒவ்வொரு கிராம சேவகர்; பிரிவுதோரும் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும். இந்நடவடிக்கைகளுக்கு கடதாசி சான்றுத் தகைமையுடையவர்களை மாத்திரமின்றி, வினைத்திறன்மிக்க தொழில்சார் அனுபம் கொண்டவர்களும்; உள்வாங்கப்படுவது முக்கியமாகும்.

அத்தோடு, பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர்கள், பாதுகாவர்கள் அலட்சியமாகச் செயற்பாடாது எந்தப்பொந்தில் எந்தப் பாம்பு இருக்கும் என்பதை குறைந்தபட்சம் அறிந்து துஷ்பிரயோகங்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான உரிய அறிவைப் பெற்று அதற்கேற்ப செயற்படுவது பிள்ளைகள் குறித்த முக்கிய கடப்பாடாகும். வேலிகள் போல் நடிக்கும் காமப் பிசாசுகளிடமிருந்தும் ஏனைய கயவர்களிடமிருந்தும் வளரும் பயிர்களான பிள்ளைகள் பாதுகாக்கப்படுவதோடு அவர்களின் எதிர்காலம் வளமுள்ளதாகவும் ஆரோக்கியமிக்கதாகவும் அமையவதை உறுதிப்படுத்துவது  பெற்றோர்கள் உட்பட சமூகமயமாக்கல் முகவர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.

விடிவெள்ளி – 26.10.2017

எதிர்காலத்தை இழக்கும் சிறுவர்கள்  எதிர்காலத்தை இழக்கும் சிறுவர்கள் Reviewed by Madawala News on 10/26/2017 10:17:00 PM Rating: 5