Kidny

Kidny

கிரான் சந்தை விவகாரத்தால் தோன்றியுள்ள நெருக்கடியை இனவிரிசலாக மாற்ற வேண்டாம்.

மட்டக்களப்பு மாவட்டம் கிரானில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள்
வியாபாரம் செய்வதற்குத் தடைவிதிக்கும் சுவரொட்டிகள் நேற்று (29.10.2017) ஒட்டப்பட்டிருந்தன.  

இது அங்குபதற்ற நிலையையும் இன முறுகலையும்தோற்றுவித்திருந்தது தெரிந்ததே. இதனால் உடனடியாக பொலிஸார் குவிக்கப்பட்டனர். சந்தைகள் இடம் பெறும்மட்டக்களப்பின் ஏனைய சில இடங்களிலும் இதுபோன்ற விரிசல்களை ஏற்படுத்த சிலதீயசக்திகளினால் முயற்சிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.  

குறிப்பாக மட்டக்களப்புகொக்குவில் பகுதியில் இடம் பெறும் வாராந்தசந்தையிலும் முஸ்லிம் சமூகத்தினர் வியாபாரம் செய்வதனைத் தடுப்பதற்கான முயற்சிகள் இன்றுமேற் கொள்ளப்பட்டன. இருப்பினும பொலிஸார்மற்றும் அப்பிரதேச தமிழ் மக்களின் தலையீட்டின் காரணமாக தீய சக்திகளின் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

இந்த நெருக்கடியான நிலமையைக்கட்டுப்படுத்த இனவிரிசலற்ற சுமுகமான சூழ்நிலையைக் கொண்டு வருமாறுபொதுநலனில் அக்கறை கொண்ட பலரும் வேண்டுகோள் விடுத்தனர். இதில் தீய சக்திகள் சிலரின் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியில் இது தொடர்பாக விரைந்துநடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தைஉணர்ந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னண தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான  அவசரசந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக .தே.கூ.வின் செயலாளரும்முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமானதுரை இராசசிங்கம் அவர்களை NFGG யின் தேசிய அமைப்பாளர் .பிர்தௌஷ் நேரல் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

.தே.கூ.வின்மட்டக்களப்பு காரியாலயத்தில் இடம்பெற்ற கிரான் சந்தை விரிசலில்பாதிக்கப்பட்ட முஸ்லிம் அங்காடி வியாபாரிகளின்பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கொக்குவில் சந்தைப்பகுதிக்கு நேரில் விஜயம்செய்த NFGG யின் தேசிய அமைப்பாளர் அங்குள்ள நிலைமைகளை நேரில் கேட்டறிந்து கொண்டார்.

எந்தப் பிரச்சினையையும் பேசித் தீர்ப்பதே சிறந்தது. தமிழ்- முஸ்லிம்களிடையே அனாவசியமான பிரச்சினைகளை வளர்ப்பதன் மூலம் திரைமறைவில் இயங்கும் தீய சக்திகளே நன்மையடைவர் எனவும் நல்லாட்சிக்கான தேசியமுன்னணி சுட்டிக் காட்டியுள்ளது.


இந்த நிலமையைத் தொடர விட்டால் கிழக்கு மாகாணத்தின் சமூக நல்லிணக்கம் ஆழமாகப்பாதிப்புறும். கடந்த கால கசப்பான அனுபவங்கள் மீண்டும் தலை தூக்காத வண்ணம் மிகுந்த நிதானத்தோடும் விவேகத்தோடும் செயல்படவேண்டியது நம் அனைவரதும் கூட்டுப்பொறுப்பாகும் என நல்லாட்சிக்கான தேசியமுன்னணி தெரிவித்துள்ளது.
கிரான் சந்தை விவகாரத்தால் தோன்றியுள்ள நெருக்கடியை இனவிரிசலாக மாற்ற வேண்டாம்.  கிரான் சந்தை விவகாரத்தால் தோன்றியுள்ள நெருக்கடியை இனவிரிசலாக மாற்ற வேண்டாம். Reviewed by Madawala News on 10/31/2017 12:02:00 PM Rating: 5